உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலி சம்பவம் 3 பேருக்கு ஜாமின் மறுப்பு

கள்ளச்சாராய பலி சம்பவம் 3 பேருக்கு ஜாமின் மறுப்பு

சென்னை:கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தில், கைதான மூவரது ஜாமின் மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில், 70 பேர் இறந்தனர். சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலரை கைது செய்தனர். இவர்களில் 17 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சடையன், வேலு, கவுதம் ஜெயின் ஆகியோரது ஜாமின் மனுக்களை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மூவரும் ஜாமின் கோரி, மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள், நீதிபதி தனபால் முன், விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, மூவரது ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை