உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 644 இடங்களில் நடந்தது பறவைகள் கணக்கெடுப்பு

644 இடங்களில் நடந்தது பறவைகள் கணக்கெடுப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 644 நீர் நிலைகளில் நடந்த ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில், பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழகத்தில் ஆண்டு தோறும், ஜனவரி, பிப்., மாதங்களில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது.முதற்கட்டமாக, சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று, 644 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை பள்ளிக்கரணை, திருவள்ளூர் மாவட்டம் ஆகிய இடங்களில், தி நேச்சர் டிரஸ்ட் அமைப்பினர் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 118 வகையை சேர்ந்த, 27,000 பறவைகள்; திருவள்ளூர் மாவட்டத்தில், எட்டு நீர் நிலைகளில், 65 வகையை சேர்ந்த, 7,500 பறவைகள் இருப்பது தெரியவந்தது.மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த புள்ளி விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ