உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியா? எதுவும் நடக்கலாம்: சீனிவாசன்

பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியா? எதுவும் நடக்கலாம்: சீனிவாசன்

திண்டுக்கல் : ''அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பரும் இல்லை. இப்போது, பா.ஜ.,விற்கு நாங்கள் எதிரி. 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு திண்டுக்கல்லே சாட்சி. இங்கு கொலை, கொள்ளை அதிகமாக நடக்கிறது. காட்சி மாறுவதற்கு ஆட்சி மாற வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஸ்டாலின் துணை முதல்வரானார். இப்போது, உதயநிதி துணை முதல்வராகியுள்ளார். வருங்காலத்தில், இன்பநிதி துணை முதல்வராவார். உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து, ஆளுங்கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். தேவையில்லாமல் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது.நடிகர் விஜய் கட்சி துவங்கியதை வரவேற்கிறோம். மாநாட்டை தொடர்ந்து அவர் என்ன செய்ய உள்ளார் என்பதை இனிதான் பார்க்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க, 16 அமாவாசை இருக்கிறது. 10 அமாவாசை முடிந்தவுடன், தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் சேர்ந்து கொள்வர். கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க நாங்கள் தயார். ஆனால், கூட்டணி அமையும் பட்சத்தில் அதை உதாசீனப்படுத்த முடியாது. கூட்டணி வந்தால் ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயகக் கடமை. அனைவரும் சேர்ந்தால்தான் ஓசை எழுப்ப முடியும். இவ்வாறு கூறினார். பா.ஜ., உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு,''ஜோதிடம் சொல்ல முடியாது; தேர்தல் வரும்போது, அதுகுறித்து தெரியவரும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பரும் இல்லை. இப்போது, பா.ஜ.,விற்கு நாங்கள் எதிரி; அடுத்த 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,'' என்றார் சீனிவாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
அக் 09, 2024 09:36

அன்றைய ஜெயலலிதா ஆதரவாளர் சீனிவாசன். கட்சியில் பழைய நபர். ஓரளவிற்கு கட்சியின் நாடித்துடிப்பு தெரியும். ஆனால் பா ஜா க கட்சியிடம் விசுவாசமாக இருப்பதுபோல் நடித்துவிட்டனர் இந்த கட்சியினர். ஏனென்றால் கட்சி நடிப்பிற்கு சொல்லவேண்டும். எப்படி இவர்களுக்கு எதிரி யாக இருக்கமுடியும். போன தேர்தலில் கட்சி சிலவிற்கு நிதி அளித்தவர்களை தூற்றுதல் நன்று அன்று


sankaranarayanan
அக் 09, 2024 07:35

15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறியதால் கட்சியில் கலகலப்பு ஏற்பட்டுள்ளது ஆதலால் விரைவில் கன்யாகுமரியில் தளவாய் சுந்தரத்திற்கு ஏற்பட்ட கதி விரைவில் இவருக்கும் ஏற்படும் இப்படியே ஒவ்வொவொரு நபரையும் கட்சியிலிருந்து விலக்கிக்கொண்டு சென்றால் எஞ்சியிருப்பது இடையில் வந்த எடப்பாடி ஒருவர் தானிருப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை