உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிடிவாதம் காட்டாமல் முடிவெடுங்கள் தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., அறிவுரை

பிடிவாதம் காட்டாமல் முடிவெடுங்கள் தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'உங்கள் பலம் என்ன என்பது, எங்களை விட உங்களுக்கு தெரியும்; பிடிவாதம் காட்டாமல் கூட்டணி முடிவை சொல்லுங்கள்' என, தே.மு.தி.க., தலைமையிடம், பா.ஜ., மேலிடம் கூறிய தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலுக்காக, பலமான கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். இதற்காக அவரே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, கடந்த ஏப்ரல், 11ல் சந்தித்து கூட்டணியை அறிவித்தார்.அம்மாத இறுதியிலேயே பா.ம.க., - தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் சேர்த்து, இம்மாதம் முதல் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் நடத்தி, கூட்டணியை பலப்படுத்த, அமித் ஷா திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில், பஹல்காமில் நடந்த தாக்குதல் விவகாரத்தால், அமித் ஷா பயணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவரை இம்மாதம், கோவைக்கு அழைத்து வர, கட்சியினர் திட்டமிட்டனர். ஆனால், தென் மாவட்டங்களில் தேர்தல் பணிகளை வேகப்படுத்த, மதுரைக்கு வரவே அமித் ஷா விரும்பினார்.அதற்கு ஏற்ப, நாளை மதுரை வரும் அமித் ஷா, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கிறார். இம்மாதத்திற்குள், தமிழகத்தில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை இறுதி செய்து, வரும் செப்டம்பரில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்க வைத்து, தமிழகத்தின் தேர்தல் பிரசாரத்தை துவக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.இதனால் தான் பா.ம.க, - தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் சேர்க்க பேச்சு வேகமாக நடத்தப்படுகிறது. ஆனால், 'அடுத்த ஆண்டு துவக்கத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம்' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.இதை சாதகமாக பயன்படுத்த தி.மு.க., நினைக்கிறது. தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க, அக்கட்சி விருப்பமில்லை. ஆனால், விஜயகாந்த் ஆதரவாளர்களை வளைக்க முயற்சிக்கிறது. இதற்காகவே, மதுரை பொதுக்குழு கூட்டத்தில், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது.ராஜ்யசபா சீட் விஷயத்தில், தங்களை ஏமாற்றியதாக அ.தி.மு.க., மீது தே.மு.தி.க., கோபமாக இருப்பதால், அக்கட்சியை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், பா.ஜ., மேலிடம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மேலிட தலைவர்களின் சார்பில், தே.மு.தி.க., தலைமையிடம் பேசப்பட்டுள்ளது.'உங்களின் பலம் என்ன என்பது, எங்களை விட உங்களுக்கு நன்கு தெரியும். கூட்டணியை தேர்தலுக்கு நெருக்கத்தில் அறிவித்தால், தொண்டர்கள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுவது சிரமம். எனவேதான், கூட்டணியை முன்கூட்டியே முடிவு செய்யும் பணியில், அமித் ஷா தீவிரம் காட்டுகிறார். கூட்டணியில் சேருவதில் பிடிவாதம் காட்டாமல் முடிவு எடுங்கள்' என, பிரேமலதாவிடம் சொல்லப்பட்டு உள்ளது.ஆனால், பா.ஜ., மேலிட தவைர்கள் நேரடியாக வந்து பேச வேண்டும் என்று தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. இந்த விபரமும், மேலிட தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Rengaraj
ஜூன் 07, 2025 16:31

ஒருவருக்கொருவர் திட்டுவது, எதிர்ப்பது போன்று பாவலா காட்டி , திரைமறைவில் கள்ள கூட்டணி வைத்துக்கொண்டு ,ஒன்று நான் அல்லது நீ என்று முறை வைத்து , ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே ஆட்சி செய்த திராவிட கட்சிகள் இங்கே ஆண்டது போதும்.


venugopal s
ஜூன் 07, 2025 13:02

தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது!


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 07, 2025 14:41

அந்த அளவுக்கு மதுவுக்கு போதைக்கும் ஆயிரம் ரூபாய் பிரியாணி அடிமையாகிப்போன தமிழர்கள். உண்மை என்றும் மறைக்க முடியாது.


Sivagiri
ஜூன் 07, 2025 12:55

பழைய பித்தளை பாத்திரம் - என்னதான் மெருகு ஏத்தி வச்சாலும் , யாரும் யூஸ் பண்ண மாட்டாங்க . . . கிலோவுக்கு ,வித்திட்டு காசை வாங்கிட்டு போகலாம் , அல்லது சேட்டு கடையில் அடகு வைக்கலாம் . . . அ-திமுகா-விடம் ? - அல்லது டில்லி சேட்டுவிடம் ? . . இல்லேனா வச்சிக்கிட்டு மினிக்கிகிட்டே இருக்க வேண்டியதுதான் .- -


நசி
ஜூன் 07, 2025 09:16

தேமுதிக..கோவிலில் காணாம போன செருப்பு...அதை விட்டு ஓழித்து பாஜக வுக்கு மிக விலை மதிப்புள்ள அண்ணாமலையை உபயோக படுத்துங்கள்..


E. Mariappan
ஜூன் 07, 2025 10:49

குறுகிய கால லாபத்தை கணக்கில் கொண்டு பாஜக அண்ணாமலையைக் காவு கொடுத்து அதிமுக வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தவறான முடிவு செய்துள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாஜக எப்போதும் தமிழ் நாட்டில் தலை தூக்க முடியாது. 2017 இல் அதிமுக வை பாஜக பாதுகாக்காமல் இருந்திருந்தால் 2017 இல் திமுக ஆட்சி அமைத்து, 2022 இல் பாஜக ஆட்சி வந்திருக்கும். அண்ணாமலை மீது எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்றால் அண்ணாமலை வேண்டும்


புரொடஸ்டர்
ஜூன் 07, 2025 09:00

மற்ற அரசியல் கட்சிக்கு அறிவுரை வழங்க பாஜகவுக்கு அறிவாற்றல் கிடையாது என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவாக தெரியும்.


JANA VEL
ஜூன் 07, 2025 10:16

. உனக்கு ஒன்னும் தெரியல. பா ஜ க என்ன முடிவு செய்கிறது என்பதில்தான் எல்லா கட்சிக்கும் இப்போ தூக்கம் போகுது


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 07, 2025 08:23

பிரபல நகைச்சுவை நடிகருக்கு சில சி க்கள் கொடுத்து வாடகைக்கு அமர்த்தி விஜய காந்தை வசை பாட வைத்தாலும் மீண்டும் அவர்களுடன்தான் இணையப்போகிறார்கள் .காலப்போக்கில் டார்ச் லைட் கம்பெனிக்கு வந்த நிலைதான் இந்த டமாரம் கம்பெனிக்கும் .


Bharathi
ஜூன் 07, 2025 08:17

காலி பெருங்காய டப்பாவுக்கு எதுக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்குது பிஜேபி? அந்தம்மாவுக்கு முக்கியம் பண பேட்டி. பொண்டாட்டியும் மச்சானும் சேர்ந்து பேராசையில் நல்ல மனுஷனை காணாம ஆக்கினாங்க


Svs Yaadum oore
ஜூன் 07, 2025 08:11

எட்டப்பன் காலில் டெல்லி விழுந்தது சரியல்லதான் .....கடைசி நேரத்தில் இந்த கூட்டணியை காலி செய்து விட்டு எட்டப்பன் இ சி ஆர் நடிகன் கட்சியுடன் போகவும் வாய்ப்பு அதிகம் ...இங்குள்ள மக்கள் திருந்தும் வரை வேற வழியில்லை .....இல்லையென்றால் டாஸ்மாக் பள்ளி மாணவர் போதை கள்ள சாராயம் என்று இன்னும் நன்றாக பட்டு திருந்தட்டும் ....


சந்திரன்
ஜூன் 07, 2025 08:08

தேமுதிக வை கழட்டி விட வேண்டும்


Thirumal s S
ஜூன் 07, 2025 07:58

பிஜேபி உடன் யார் கூட்டணி அவர்கள் அழிவார்கள் . பிஜேபியால் அழிக்க படுவார்கள்


சமீபத்திய செய்தி