உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிரட்டல்களால் பா.ஜ., போராட்டத்தை தடுக்க முடியாது: அண்ணாமலை

மிரட்டல்களால் பா.ஜ., போராட்டத்தை தடுக்க முடியாது: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' எங்களின் போராட்டத்தை எந்த மிரட்டல்களினாலும், தடுக்க முடியாது என்பதை தி.மு.க., அரசு உணர வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணியின் நீதி கேட்பு போராட்டம் இன்று மதுரையில் நடந்தது. இதில், கையில் சிலம்புடன் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவேன் எனக்கூறினார். ஆனால், நமது தாய்மார்கள், சகோதரிகள், மகள்களை பாதுகாக்கத் தவறிய தி.மு.க., அரசுக்கு எதிரான போராட்டங்களை நசுக்குவது என்ற தி.மு.க., அரசின் செயல்பாடுகள், முதல்வரின் இரும்புக்கரம் பயனற்றது என்பதையும், துருப்பிடித்தது என்பதையும் காட்டுகிறது.கொடுங்கோல் மற்றும் திறமையற்ற தி.மு.க.,ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ., மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவரையும் சிறையில் அடைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களின் போராட்டத்தை எந்த மிரட்டல்களினாலும், தடுக்க முடியாது என்பதை தி.மு.க., அரசு உணர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ram
ஜன 04, 2025 04:44

திருட்டு திராவிடம் நாட்டின் சாபக்கேடு.. அழித்தொழிக்க அசுரனாய் வந்த அண்ணாமலையின்னு .சொல்லலாமே..


Rajkumar Ramamoorthy
ஜன 03, 2025 22:07

Nowadays seeing lot of DMK IT Wing posts in this website. Opposing without any clear views.


K.n. Dhasarathan
ஜன 03, 2025 21:03

அண்ணாமலை பேச்சை மாற்றி பேசுங்க, தி மு க காரங்க சொல்லவந்ததை நீங்க சொல்றீங்க, அமலாக்க துறை போன்ற மிரட்டல்களால் தி மு க வின் வளர்ச்சியை தடுக்க முடியாது. சரியா ? அது சரி போராட்டம் எதுக்கு ஐயா ? குற்றம் செய்தவனை கைது பண்ணியாச்சு, நீதி மன்றத்திலே வழக்கு போட்டாச்சு, ஆ.தி மு க ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் போல முன்னாள் ஆ, தி மு க அமைச்சர்கள், அதிகாரிகள் அப்படியே கிடப்பில் இருக்கே வழக்கு அதை கேட்டால் அண்ணாமலை பதில் சொல்ல முடியுமா ?


Narayanan Muthu
ஜன 03, 2025 20:21

பெண்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களை மதுரைக்கு அழைத்து வந்து போராட்டம் நடத்தியது அம்பலம் ஆகி விட்டதாம். ஏன் உள்ளூர் மக்கள் ஆதரவு தர மறுத்துவிட்டார்களா.


MADHAVAN
ஜன 03, 2025 19:56

இப்படி ஊதி ஊதி பெருசுப்பண்ணி, அத பெண்ணை தற்கொலைக்கு தூண்டிவிடுறார்,


Constitutional Goons
ஜன 03, 2025 19:12

பால்வழியும் குழந்தை


P.M.E.Raj
ஜன 03, 2025 18:52

திமுக கோமாளி ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. திமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு இதுதான் பரிசு. ஒரு சதவீதம் கூட, ஆட்சி செய்யத்தெரியாத முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.


mindum vasantham
ஜன 03, 2025 18:34

யார் அந்த சார்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 03, 2025 18:29

இவர் நிஜமாகவே ஐ பி எஸ் தானா?? நகரின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை அல்லது சட்டம் ஒழுங்கு பாதிப்பு, வி ஐ பி வருகை, அயல்நாட்டுப் பிரதிநிதி வருகை.. முதலான பல விஷயங்களில் ஏதேனும் நிகழ வாய்ப்பிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கிற சூழலில், கட்சி ஊர்வலம், போராட்டம், மாநாடு முதலியவற்றுக்கு அனுமதி மறுக்கும் அதிகாரம் போலிசுக்கு இருக்கிறது. இதை ஐ பி எஸ் ட்ரெயினிங் கில் சொல்லித் தருகிறார்கள். இந்த நடவடிக்கையையும் அரசியல் ஆக்கிப் பேசினால் யாரும் மதிக்கப் போவதில்லை. தமிழ் நாட்டில் ஏதாவது கலவரம், கல் வீச்சு, அடிதடி யை உருவாக்கத் தான் பாஜகவின் முன்னாள் ஐ பி எஸ், தெரிந்தே சட்ட மீறல் செய்கிறார்.


பேசும் தமிழன்
ஜன 03, 2025 20:09

வைகுண்டம்..... அனுமதி யாருக்கு கிடைக்கும்... திமுக மற்றும் அதன் ஜால்ரா அல்லக்கை கட்சி களுக்கு மட்டுமெ கிடைக்கும்.... முதலில் இந்த அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டத்தையே நீக்க வேண்டும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 03, 2025 22:11

வைகுண்டம்....திருப்பி போட்டால் குண்டு வை....அதை தான் இப்பொழுது இவர் செய்து கொண்டு இருக்கிறார்....அவர் அறிவிற்கு கால்தூசுக்கு சமமில்லாத இவர் ஐபிஎஸ் சட்டங்களை பற்றி பேசுகிறார் இந்த முரசொலி அறிவாளி....எத்தனையோ அடிமைகளை பார்த்திருப்போம் ஆனால் இவரை போல் ஒரு கொத்தடிமையை தமிழ் நாடு கண்டிருக்காது.... இவர் வீட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்தாலும் அடிமை விசுவாசத்தால் கண்டு கொள்ள மாட்டார்....!!!


திகழ்ஓவியன்
ஜன 03, 2025 18:26

அதை விடு இப்போ நீ என்னவா இருக்கிறாய் WAITING LIST SERVANT ஆகவ இருக்காய் வந்து இரண்டு மாதம் ஏன் RESTORE செயலை அப்போ வேறு பொங்கலுக்குள் வருகிறாரோ


V வைகுண்டேஸ்வரன்
ஜன 03, 2025 20:01

Your post doesnt make any sense.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை