மேலும் செய்திகள்
ஏவிஎம் இல்லாமல் தமிழ் சினிமா பற்றி பேச முடியாது: முதல்வர் ஸ்டாலின்
3 hour(s) ago | 3
எழுத்து என்பது விதை நிலத்தை தானே தேர்ந்தெடுக்கும்: கவிஞர் புனிதஜோதி
6 hour(s) ago | 1
ஜன., 9 வரை மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago
மதுரை: மதுரை பா.ஜ., அலுவலகத்தை தாக்கிய தி.மு.க.,வினர், மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் பாதுகாப்பு அளிக்கும்படி போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் நகர் தலைவர் ராஜரத்தினம் புகார் அளித்துள்ளார். புகாரில் தெரிவித்துள்ளதாவது : நகர் அலுவலகம் பைபாஸ் ரோடு, அருள்நகரில் உள்ளது. இந்த இடம் தொடர்பாக, வக்கீல் கணேசன் என்பவருக்கும், மாநகராட்சி மேற்கு மண்டல முன்னாள் தி.மு.க., தலைவர் சின்னான் மகன் செந்தமிழன் மற்றும் டாக்டர் சந்திரகாந்த், அவரது மனைவி சுசீலாவுக்கும் முன்விரோதம் இருக்கிறது. பா.ஜ., அலுவலகத்தை தி.மு.க.,வினர் கடந்த மே மாதம் தாக்கினர். புகார் அளித்தும் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. மீண்டும் ஜூன் 5ல் அலுவலக பெயர் பலகை, பேனரை சேதப்படுத்தினர். அப்போதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. தி.மு.க.,வினர் எங்கள் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
3 hour(s) ago | 3
6 hour(s) ago | 1
9 hour(s) ago