உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் பா.ஜ.: திருமா

அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் பா.ஜ.: திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வி.சி., தலைவர், திருமாவளவன் அளித்த பேட்டி: மணிப்பூரில் சட்டம் -- ஒழுங்கு நிலை மிக மோசமாக உள்ளது. ராணுவம் குவிக்கப்படும் அளவிற்கு, அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. ஆண்டு கணக்கில் அங்கு வன்முறை தொடர்ந்து நடந்து வரும் சூழலில், பிரதமராக இருக்கும் மோடி மணிப்பூருக்கு செல்லாமல் இருப்பது ஏன்? உடனே அங்கு சென்றால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும். அ.தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க, பா.ஜ., பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அ.தி.மு.க., முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளையும், பா.ஜ., முறியடித்து விடுகிறது. அ.தி.மு.க.,வை தனிமைப்படுத்தினால், வேறு வழியின்றி, பா.ஜ.,வுடன் கூட்டணி சேரும் என திட்டமிட்டு பா.ஜ., அக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி சேரப்போகிறதா, இல்லை தனித்தே களம் காணப்போகிறதா என்பது அக்கட்சி முன்பாக இருக்கும் சவால். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Rengaraj
நவ 21, 2024 12:49

அண்ணா தி மு க அமைப்பு ரீதியாக நிறைய உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் அது அவர்களின் பலம் என்று சொல்லிக் கொண்டாலும் வாக்கு கேட்டு செல்லும்போது என்ன சொல்லி கேட்பார்கள் ? ஜெ ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி என்று இவர்களை பற்றி சொல்லி வோட்டுக்கேட்கவேண்டும்.அல்லது திமுக வின் ஊழலை சொல்லி வோட்டுக்கேட்கவேண்டும். இவர்கள் தான் ஏற்கெனெவே ஆட்சியில் இருந்தவர்கள் ஆயிற்றே இவர்களுக்கு தான் அதிகாரத்தில் பலமட்டங்கள் தெரியுமே அதில் எப்படியெல்லாம் ஊழல் செய்யலாம் என்று தெரியுமே திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மக்கள் மன்றத்தில் அதை விலாவாரியாக , தொகுதி வாரியாக , திட்டங்கள் வாரியாக , எடுத்துச்சொன்னார்களா ? ஊழல் நடைபெறுகிறது என்றால் பொதுநலன் வழக்கோ அல்லது கட்சிசார்பாக எத்தனை மந்திரி எம்.எல்.ஏ க்கள் மீதி வழக்கு தொடர்ந்தார்கள். ? நிர்வாக சீர்கேடு என்று பொத்தாம்பொதுவாக சொன்னால் மட்டும் போதாது அதை துறைவாரியாக, நகரங்கள் வாரியாக என்னவெல்லாம் சீர்கேடு நடக்கிறது என்று சொன்னார்களா ? , அது இந்த நான்குஆண்டுகாலத்தில் அவர்கள் தெருவில் இறங்கி மக்களுக்காக என்னெவெல்லாம் செய்தார்கள் என்று பட்டியல் போட முடியுமா ? இப்படி எல்லாம் ஆளும் திமுகவை எதிர்த்து எந்த ஒரு எதிர்க்கட்சியும் செய்வதில்லை. தட்டிகேப்பதில்லை. ஆளும்கட்சிமீது வழக்குகள் தொடுப்பதில்லை. பின் எப்படி மக்களிடம் நம்பிக்கையை பெறுவது ? வாக்குகளை அள்ளுவது ?


duruvasar
நவ 21, 2024 11:35

ஐயா உனக்கு திமுக கொடுக்கும் நிர்பந்தத்தை பற்றி ஓரிரு வார்தைகளையாவது பேசுங்களேன்.


Barakat Ali
நவ 21, 2024 11:10

அதிமுகவுக்கு பாஜக இன்னதெல்லாம் செய்யுது என்று திருமா சொல்கிறாரே ..... அதையெல்லாம் பாஜக உண்மையில் திமுகவுக்குத்தான் - ஆம் நீங்க சரியாத்தான் படிச்சீங்க - திமுகவுக்குத்தான் செய்கிறது ...... சட்டமன்றத் தேர்தலுக்குள், அதாவது வரும் ஒண்ணேகால் ஆண்டிற்குள் தலைமைக் குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் ரெயிடு மூன்று கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்பு ...... எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அண்ணாமலை இந்தியா திரும்பிய பிறகு திமுகவுக்குள் புயல் வீசும் .....


M Ramachandran
நவ 21, 2024 11:05

நீங்க போயி விளக்கி விடுங்க. அட போயி வேலயா பாருவே.


M Ramachandran
நவ 21, 2024 11:04

தீ மு கா விற்காக மற்ற கட்சிகளில் கலகம் உண்டாக்கி ஸ்டாலினிடம் ஷொட்டு வாங்க என்னவெல்லமோ செய்ய சொல்லுது . ஆனால் எதிரில் உட்காரா தான் நாற்காலிகள் போராவதில்லை.


M Ramachandran
நவ 21, 2024 10:51

வரும் தேர்தலோடு உன் அத்தியாயம் முடிந்து விட போகிறது சரி


M Ramachandran
நவ 21, 2024 10:45

உனக்கு ஏன் இந்த பொச்சரிப்பு. நீ சாமரம் வீசிக்கொண்டு கோத்தடிமை வேலை செய்பவன். உன்னை ஒரு கட்சி தலைவனாக கூட மதிப்பதில்லை. உட்கார இருகை கூட கொடுப்பதில்லை. அதற்க்கு உன்னிடம் பதில் இருக்கா? அப்படியிருக்க அடுத்தவன் ..... ஏன்


சிவா. தொதநாடு.
நவ 21, 2024 10:12

உள்ளூரில் விலை போகாத அடிமாடு தான் ஞாபகம் வருகிறது


sankar
நவ 21, 2024 09:54

ஜாதிக்கட்சி தம்பி - மத்தவங்களை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் - நீங்கள் வழக்கம்போல உங்கள் ஜாதி நெருப்பை பற்றவைக்கும் வேலைகளை கவனியுங்கள்


Haja Kuthubdeen
நவ 21, 2024 09:52

அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயார் என்று நீங்கள் முதலில் அறிவியுங்கள்.பிஜேபியின் சூழ்ச்சி பிசுபிசுத்து விடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை