உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொல்வது முற்போக்கு சமூகத்தின் தரத்தை சீரழித்து விடும்!

பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொல்வது முற்போக்கு சமூகத்தின் தரத்தை சீரழித்து விடும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி, தனக்கு நேர்ந்த துயரச் சம்பவம் குறித்து, தைரியத்துடன் புகார் அளித்தது பாராட்டுக்குரியது' என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வராத வரை, குற்றவாளிகள் இதுபோன்ற குற்றங்களை செய்து கொண்டே இருப்பர்' என்றும் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் கூறியதாவது:

வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர், பழைய குற்றவாளி. அவர் மீது, இதே போன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கைதான நபர், சரித்திர பதிவேடு குற்றவாளி என, போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

தலையாய கடமை

இருப்பினும், தொடர்ந்து அவர் போலீசாரால் கண்காணிக்கப்பட்டரா என்பது தெளிவாக தெரியவில்லை. அண்ணா பல்கலை வளாகத்தில், முன்னரும் இதுபோன்ற பல அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. சில சம்பவங்கள், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு தெரியும். ஆனால், புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.வழக்கில் கைதானவர் தி.மு.க., நிர்வாகி என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விசாரணை துவக்க கட்டத்தில் இருப்பதால், அந்தக் குற்றச்சாட்டுகளை, இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ள விரும்பவில்லை. இந்த மாதிரியான குற்றத்திற்கு, அரசியல் சாயம் முக்கியமில்லை. முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இது, சட்டப்படி குற்றம். பாதிக்கப்பட்ட நபரின் விபரங்களை, போலீஸ் அல்லது யார் வெளியிட்டாலும் குற்றமாகும். முதல் தகவல் அறிக்கை நகலை பார்த்த போது, பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியத்தைப் பாதுகாக்க தவறும் வகையில், அதில் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களுக்காக, எப்போதும் தார்மீக ரீதியாக தண்டிக்கப்படுகின்றனர். ஆண் அல்லது பெண், இவற்றில் யார் அதிக சக்தி வாய்ந்தவர் என்பது விவாதம் அல்ல. முக்கிய விஷயம் என்னவெனில், ஒரு வாழ்க்கை தொடர்புடையது.பெண் என்பவள் தனக்கென உரிமைகள், சுதந்திரம் மற்றும் பார்வை உடையவள். தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவளது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை தியாகம் செய்யுமாறு, எந்த ஒரு சமூகமும் அல்லது நிறுவனமும் கட்டளை இடக்கூடாது. பெண்களை பாதுகாப்பது, அரசு மற்றும் சமூகத்தின் தலையாய கடமை. அரசியலமைப்பு சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு உண்டு. அரசியலமைப்பு சட்டம், ஆண், பெண் என்ற வேறுபாட்டை கூறவில்லை. இந்த சமூகம், பெண்ணை அவமானப்படுத்த வெட்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்வதை, குற்றவாளிகள் சாதகமாக கருதுகின்றனர்.

சீரழிக்கும் செயல்

ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்று ஆணையிட, சுதந்திர நாட்டில் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது, அவளது வாழ்க்கை; அவள் உடல்; அவளுடைய விருப்பம். ஆண்களும் சமூகமும், ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெறுவதற்கு உழைக்க வேண்டும். மாறாக, அவர்களின் செயலால் சிதைத்து விடக்கூடாது. இதுதான் ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அடிப்படை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணை குறை கூறுவதும், அவமானப்படுத்துவதும் முற்போக்கு சமூகத்தின் தரத்தை சீரழிக்கும் செயல்.பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்துவது, குற்றம்சாட்டுவது போன்ற செயல்கள், ஒருவரின் ஆன்மாவை கொல்லும். ஒவ்வொரு ஆணும், பெண்ணை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதை விட, பெண்ணை எப்படி மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை, சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும்.

முக்கியமானது

வழக்கில் எப்.ஐ.ஆர்., வெளியானது துரதிருஷ்டவசமானது. இது பாதிக்கப்பட்டவரின் அவமானத்திற்கு வழி வகுத்துள்ளது. எப்.ஐ.ஆர்., வெளியானது, தனியுரிமைக்கான உரிமையை மீறியது மட்டுமல்லாமல், கண்ணியத்திற்கான உரிமையையும் பறித்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மிகவும் மன வேதனை மற்றும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது; வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு அல்லது தொழில்நுட்ப பிரச்னையால், இது நடந்துள்ளது என்று கூறினாலும், இதுபோன்ற உணர்வுப்பூர்வமான வழக்குகளில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், இதுபோன்ற பிழைகள் இடம் பெறக் கூடாது என்பதை புரிந்து கொள்வது அவசியம்.எப்.ஐ.ஆர்., வெளியானது பெரிய குறைபாடாகும். கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கும். அனைத்து விவரங்களுடன் பொது வெளியில் எப்.ஐ.ஆர்., வந்தால், பாதிக்கப்பட்டவர்கள், இதுபோன்ற குற்றங்கள் குறித்து புகாரளிக்க முன்வர தயங்குவர்.வெளியான இந்த விபரங்களால், அவர்களின் சமூக வாழ்க்கையை சீர்குலைப்பது மட்டுமின்றி, விசாரணைக்கும் இடையூறாக இருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்டவர் துன்புறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, குற்றவாளிகள் மீண்டும் பெண்களுக்கு எதிராக, இதுபோல குற்றங்களை தயக்கமின்றி செய்யவும் வழிவகுத்து விடும். எனவே, இது தீவிரமாக பார்க்கப்பட வேண்டும். இதுகுறித்த விசாரணை மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்டவரது விபரங்களின் ரகசியத்தன்மை என்பது மிக முக்கியமானது. இந்த வழக்கில் தைரியத்துடன் புகார் அளித்த பெண்ணை, இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், குற்றங்கள் குறித்து புகாரளிக்க முன்வராத வரை, குற்றவாளிகள் இதுபோன்ற குற்றங்களை செய்து கொண்டே இருப்பர்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

கல்யாணராமன்
டிச 30, 2024 15:37

விஷயம் ரொம்ப விபரீதம் ஆனதால் கோர்ட்டின் அறிவுரை உபதேசம் எல்லாம் ரொம்ப பிரமாதமாக இருக்கிறது. விசாரணை அந்த வேகத்தில் இருக்குமா என்பது சந்தேகம். ஒவ்வொரு வழக்கும் 15, 20 வருடம் இழித்துக் கொண்டு போவது, பின்னர் தீர்ப்பு வழங்குவது, கோர்ட் குற்றவாளி என்று தண்டனை கொடுத்துவிட்டு பிறகு அவனை விடுதலை செய்ய சொல்வது இவைகளை ராஜிவ்கொலை வழக்கில் நடந்த கூத்து.


rama adhavan
டிச 29, 2024 19:41

கல்கத்தாவில் மருத்துவ மனையில் மருத்துவ மாணவி பலாத்காரம், கொலை. சென்னையில் கல்லூரி வளாகத்தில் இளம் மாணவி பலாத்காரம். இரண்டிலும் குற்றவாளி தரப்புக்கு காவலர் துணை. என்ன கொடுமை இந்தியாவில்? இங்கு படிக்க வர வேண்டாம், மகளிருக்கு பாதுகாப்பு இல்லை என மேலை நாடுகள் அங்குள்ளவர்களுக்கு அறிவுரை வழங்கி விடும். சுற்றுலா வரவும் அச்சப்படுவார். மொத்தத்தில் இந்தியாவின் பெயர் கெடும்.


M Ramachandran
டிச 29, 2024 16:06

பெரும்பாலு மாண பல்க்லை கழகங்களில் அயல்நாடுகள் உட்பட doctorate செய்யும் மாணவர்களுக்கு இது நடக்கும் மாணவிகளுக்கு sex torcher மாணவர்களுக்கு வீட்டு வேலை செய்தால் வீட்டு அம்மாவிற்கு காய்கறி மற்றும் மளிகை பொருள் வாங்கி வந்து கொடுத்தல் போன்ற கூற்றேவல்கள் செய்தல் சாதாரணம்


M Ramachandran
டிச 29, 2024 15:54

ஆட்சியை யார் செய்கிறார்கள் குடும்ப நன்மைக்கு ஆட்சி மக்களுக்கன்று. வேறு பலர் அந்த திருட்டு கட்சியின் பெயரை சொல்லி இந்த சட்டம் ஒழுங்கு பிரட்சணைக்கு வழி வகுக்கிறார்கள். காவல்துறையும் இஓவார்கள் அஆட்சியில் ஒன்றும் செய்ய முடியாமால் எனவள் துறை மாறி விட்டது. காவல் துறைக்கு பொறுப்பான ஸ்டாலின் பொறுப்புகளிலிருந்து நழுவ முடியாது. பதில் சொல்லியெ ஆக வேண்டும். இஙகு இந்த வருடம் சட்டம் ஒழுஙகு பிரச்சனைகள் மிக அதிகம். ஏறி கொண்டே போகிறது. ஆட்சியை செய்ய இயலவில்லையா மெத்தனமா? குடும்ப வாரிசை உச்சி முகர்ந்து பதிவியில் உட்காரவைத்து பெருமிதம் கொள்வதில் அர்த்தமில்லை. பல மோசமான நிகழ்வுகள் இவ் வருடத்தில் நடந்துள்ளது . அதிக போதை பொருள் நட மாட்டம் கற்பழிப்புகள் திருட்டு ஆள் கடத்தல் இன்னும் பல பல சட்ட மீறல்கள். காமராஜர் ராஜாஜி போன்றவர்கள் ஆட்சி காலத்தில் கோட்டை secretary இல் துறை சம்பந்தமான அலுவலகத்தில் எந்த MLA யெவும் நுழைய அனுமதி இல்லை.


Sridhar
டிச 29, 2024 12:27

எல்லாத்தையும் விடுங்க. முதல்ல, அந்த BMW ஆளு யாருனு கண்டுபிடிக்கற வழிய பாருங்க. நிச்சயமா ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு பெரிய ஆளாத்தான் இருக்கணும். கமிஷனர் ரேஞ்சுக்கு வந்து முட்டு கொடுக்கறாங்கன்னா, அந்த ஆளு மந்திரி லெவெல்ல இருப்பாரோ? FIR யை லீக் செஞ்சு புகார் அளிக்கறவங்களை மிரட்டறாங்கன்னா நிச்சயமா மந்திரிக்கும் மேல இருக்கும்போலயே?? பாலடாயிலின் பராக்கிரமம் எல்லா இடத்திலும் பாயுதோ?? என்னய்யா ஆட்சி நடக்குது இங்க??


Dharmavaan
டிச 29, 2024 20:07

கோர்ட் ஏன் இதை கேட்கவில்லை?


M Ramachandran
டிச 29, 2024 11:07

Total failure of Government and government mechionary.


Bahurudeen Ali Ahamed
டிச 29, 2024 11:02

பெண்களை பாதுகாப்பாக இருக்க சொல்வதின் காரணம் எல்லோருக்குமே நன்றாக தெரியும் இருந்தும், இருந்தும் பெரிய முற்போக்குவாதிகள் போல பெண் எப்படி வேண்டுமென்றாலும் இருப்பாள் உன்னுடைய பார்வை வக்கிரமானது உனக்கு கட்டுப்பாடு கிடையாதா என்று பேசுகிறார்கள், ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நம்மை கடந்து ஆயிரம் ஆண்களில் ஒருவன் வக்கிரபுத்திகொண்டவன் இருப்பான் அவன் யாரென்று யாருக்கு தெரியும், முற்போக்கு முற்போக்கு என்று கூறியே நம்முடைய கலாசாரத்தை இழந்து வருகிறோம், அப்புறம் அந்த பெண்ணுடைய நண்பன், டேய் உன்னை நம்பிதானே அந்த பெண் வந்தாள் அவளுக்கு ஒரு ஆபத்து எனும்போது உயிரைக்கொடுத்தாவது காப்பாத்தியிருக்க வேண்டாமா


Kanns
டிச 29, 2024 10:38

SHAMELESS JUSTICE


Barakat Ali
டிச 29, 2024 08:38

சட்டத்தின் பார்வையில் இந்த வழக்கில் அம்மாணவி பாதிக்கப் பட்டவர். ஞானசேகரன் நுழையாமல் பல்கலை நிர்வாகம் மாணவியைத் தவறான பொசிஷனில் பார்த்திருந்தால் காதும் காதும் வைத்ததுபோல நடவடிக்கை எடுத்து விஷயத்தை முடித்திருப்பார்கள்.. நமக்கு எதுவுமே தெரிய வந்திருக்காது.. அந்த மாணவிக்கும் சமூகப் பொறுப்பிருக்கிறது.. பல்கலை நிர்வாகத்துக்கும் பொறுப்பிருக்கிறது.. மாணவ மாணவிகள் இவ்வாறு நடந்துகொண்டு சமூக விரோதிகளால் மிரட்டப்படுவது அங்கே அடிக்கடி நடக்கும் சம்பவம்தான் என்று சிலர் பதிவு செய்கிறார்கள்.. ஞானசேகரன் மட்டுமல்ல, அவனும் மற்றும் அவனைப்போல பலர் இதே வேலையாக அங்கே வந்து பாலுறவு செயல்களை பார்த்து ரசித்துவிட்டு பிறகு வீடியோவும் எடுத்து இதை பகிரங்கப் படுத்திவிடுவேன் என்று மிரட்டிபணம் பறித்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.. ஞானசேகரனுக்கு எங்கு பொய் எங்கு திரும்பலாம், எங்கே என்ன நடக்கிறது, எங்கே இருந்து மிரட்டினால் வெளியுலகத்துக்குத் தெரியாது என்கிற அனைத்து விஷயங்களும் அத்துப்படி... மாணவி பயந்து புகார் கொடுக்க மாட்டார் என்று நம்பி குற்றமிழைத்திருக்கிறான். பல்கலை ஊழியர்களோ, பேராசிரியர்களோ அவனுடன் கைகோர்த்திருக்க வாய்ப்பு குறைவு .....


Dharmavaan
டிச 29, 2024 07:47

என்ன வழவழ கருது பிரசங்கம் கண்டனம் வெளியிட்டவனுக்கு தண்டனை என்ன அதை கண்டுபிடிக்க ஏன் குழு அமைக்க வில்லை. கேவலமான உபயோகமில்லாத வெற்று பேச்சு நீதிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை