உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் குத்துச்சண்டை வீரர் கொலை; 9 பேர் கைது

சென்னையில் குத்துச்சண்டை வீரர் கொலை; 9 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பிரபல குத்துச்சண்டை வீரர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் - ராதா தம்பதியினரின் மகன் தனுஷ்,24. குத்துச்சண்டை வீரரான இவர், தமிழகம் சார்பில் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n0jar5so&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போலீஸ் பணிக்காக தயாராகி வந்த இவர் மீது, வீட்டின் அருகே இளைஞர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், அவரது போலீஸ் கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு தனது வீட்டின் அருகே நண்பருடன் நின்றிருந்த போது, சில மர்ம நபர்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் கழுத்து மற்றும் உடல்பகுதிகளில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனால், சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற தனுஷின் நண்பர் அருணுக்கும் கழுத்துப் பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற ஐஸ் ஹவுஸ் போலீசார், தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த அருணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் குத்துச்சண்டை வீரர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

N Annamalai
பிப் 05, 2025 06:23

இழப்பு குடும்பத்தாருக்கும் தமிழகத்திற்கும் தான் .இளம் வீரர் .வேறு பிரச்சனைகளுக்குள் செல்லாமல் இருந்து இருக்கலாம் .


K.J.P
ஜன 30, 2025 15:59

நெஞ்சு பொறுக்குதில்லையே.


Kumar Kumzi
ஜன 30, 2025 14:05

அமைதி பூங்கா சிரிப்பாய் சிரிக்கிறது...


Ramesh Sargam
ஜன 30, 2025 13:03

நேற்று திமுக கட்சி கொடியுடன் காரில் வந்த வாலிபர்கள் இளம்வயது பெண்கள் பயணித்த காரை மடக்கி அட்டூழியம். சில நாட்களுக்கு முன்பு ஆவடியில் இரட்டை கொலை. அதற்க்கு முன்பு அண்ணா பல்கலை வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமை. இப்படி தினம் தினம் சென்னையில் திக் திக் நிமிடங்கள்தான். சென்னை, பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உயிர்வாழ தகுதியற்ற நகராக, நரகமாக மாறிவருகிறது. திமுக ஒழியவேண்டும். நகரம் நிம்மதியடைய வேண்டும்.


சந்திரசேகர்
ஜன 30, 2025 12:18

Don't worry. நீதிமன்றம் 6மாசத்துக்கு அப்புறம் ஜாமீன் வழங்கும்.அப்புறம் கேஸ் புஸ்.ஜாலினோ ஜிம்கானா


N.Purushothaman
ஜன 30, 2025 11:46

போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்காதவரை இந்த கருமங்கள் எல்லாம் தொடரும் ....தமிழகத்தை நாசமாக்கிட்டானுங்க ...


Nandakumar Naidu.
ஜன 30, 2025 11:07

தமிழகம் கொலைக்களமாகி விட்டது. ரவுடிகளின் ராஜ்யமாகி விட்டது. பொறுக்கிகளின் கூடாரமாகி விட்டது. அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி விட்டது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 30, 2025 12:32

செய்தியில் இந்த வரியைப் படிக்கவில்லையா? "இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்." படித்திருந்தால், //அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி விட்டது."// இந்த வரியை பதிவிட்டிருக்க மாட்டீர்கள். செய்தியை படிச்சுட்டு கருத்து சொல்லுங்கோ


N.Purushothaman
ஜன 30, 2025 14:36

ஏன் திமிங்கலம்? ...செய்தியை படிச்சிட்டு கருத்து சொல்லுங்கன்னு நீங்க சொல்றதை காமெடியா இருக்கு ... சரி ...தமிழகம் அமைதி பூங்கா ....அப்படித்தானே ...


rasaa
ஜன 30, 2025 10:27

தமிழ்நாடு அமைதிப்பூங்கா


Venkatesan Ramasamay
ஜன 30, 2025 10:08

குத்துசண்டை கற்று என்ன பயன். குத்துச்சண்டைவீரருக்கே இந்த கதி என்றால் சாதாரண மனிதர்களுக்கு ...????


V வைகுண்டேஸ்வரன்
ஜன 30, 2025 10:03

எவனோ 4 பேர் அடிச்சுக்கிட்டு செத்தானுங்க ன்னா கூட திராவிட மாடல், தீம்கா என்று கூப்பாடு போடுவது அறிவுகெட்டத் தனமாக இருக்கிறது.


Sudhakar
ஜன 30, 2025 10:53

...அப்போ தெரியும் வலி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை