| ADDED : நவ 25, 2025 05:39 AM
பெண்ணாடம்: இன்ஸ்டாகிராமில் 'கஞ்சா என்னிடம் கிடைக்கும்' என பதிவிட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், 'என்னிடம் கஞ்சா கிடைக்கும்' என இன்ஸ்டாகிராமில் நேற்று முன்தினம் பதிவிட்டிருப்பதாக எஸ்.பி., ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இவரது உத்தரவின்படி, பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார், பெண்ணாடம், தெற்கு முஸ்லிம் தெருவில் வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில், கஞ்சா விற்பனை செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து, கடலுார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். சிறுவனிடம் இருந்து 15 கிராம் கஞ்சா மற்றும் 200 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன், இதே சிறுவன் கஞ்சா விற்ற போது, போலீசாரிடம் இருந்து தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.