உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர் உட்பட நால்வருக்கு சிறை

போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர் உட்பட நால்வருக்கு சிறை

மதுரை: மதுரையில், போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்ட நான்கு போலீசாருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை, கோச்சடையை சேர்ந்த ஜெயா என்பவரின், 17 வயது மகன், 2019 ஜன., 24ல் நகை திருட்டு வழக்கு தொடர்பாக, எஸ்.எஸ்., காலனி போலீசாரால் விசாரிக்கப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இது தொடர்பான இழப்பீடு கோரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில், சிறுவன் மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

அங்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று பிறப்பித்த உத்தரவு: சம்பவத்தின் போது எஸ்.எஸ்.காலனி போலீசில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜா, சிறப்பு எஸ்.ஐ., - ஆர்.ரவிச்சந்திரன், ஏட்டு எஸ்.ரவிச்சந்திரன், போலீஸ்காரர் சதீஷ்குமார் குற்றவாளிகள் என, இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் பிரிவின் கீழ் 4 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை, கொலையல்லாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். தலா, 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த அருணாச்சலம், எஸ்.ஐ.,க்களாக இருந்த கண்ணன், பிரேம்சந்திரன் மற்றும் விசாரணையில் தெரியவரும் இதர நபர்களை கூடுதல் எதிரிகளாக சேர்த்து உரிய நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கையை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். கண்ணன், பிரேம்சந்திரன் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். அருணாச்சலம் பணியில் உள்ளார். விசாரணை பாரபட்சமற்ற முறையில் தொடர, அது முடியும்வரை அவரை டி.ஜி.பி., சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இவ்வழக்கை முதலில் விசாரித்த சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி.,யாக பணிபுரிந்த ராஜேஸ்வரி எதிரிகளுக்கு உதவும் வகையில் விசாரணையை சரியாக மேற்கொள்ளவில்லை. திட்டமிட்டு குறைபாடுகளுடன் செய்துள்ளதால் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை டி.ஜி.பி., மேற்கொள்ள வேண்டும். சிறுவனின் உடலில் இருந்த காயங்களை மறைத்து, வெளிக்காயங்கள் இல்லை என தவறாக குறிப்பிட்டு விபத்து பதிவேடு வழங்கிய மதுரை அரசு மருத்துவமனையில் 2019ல் டாக்டராக பணிபுரிந்த ஜெயக்குமார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் சட்டவிரோதமாக எஸ்.ஐ.,யிடம் ஒப்படைத்த மருத்துவமனை நிலைய மருத்துவராக பணிபுரிந்த லதாவிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை மருத்துவக் கல்வி இயக்குனர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Padmasridharan
செப் 30, 2025 17:02

17 வயது சிறுவன்தானே என்று நினைத்து இந்த காவலர்கள் எப்படி ஒழுங்கில்லாமல் மக்களிடையே நடந்தனரோ அதுபோல்தான் பல இடங்களிலும் ஆண்களுக்கு தொல்லைகள் கொடுப்பது ஆண் காவலர்கள்தான். இறந்தால் மட்டுமே வெளியில் வந்திருக்கிறது இது, மற்றவர்கள் நடமாடும் பிணங்களாக இருக்கின்றனர்.


ஓவியா விஜய்
செப் 27, 2025 08:49

கொரோனாவுக்காக போடவேண்டிய மாஸ்க் இப்போ முகத்தை மறைக்குறதுக்கும் யூஸ் ஆகுது...


VENKATASUBRAMANIAN
செப் 27, 2025 08:17

இதுபோன்று மற்ற வழக்குகளையும் முடித்து வைத்தால். குற்றவாளிகள் தண்டனை பெறுவார்கள்.


தியாகு
செப் 27, 2025 07:37

ஆனா பாருங்க, திருட்டு திமுகக்காரன் எவருக்கும் இதுவரையில் பாலியல் கற்பழிப்பு வழக்கில் தண்டனை கிடைத்ததேயில்லை.


Kalyanaraman
செப் 27, 2025 07:25

சபாஷ், 30 40 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தேங்கி கிடக்க, குற்றவாளிகள் இயற்கை மரணம் அடைவதற்குள் தீர்ப்பு வந்து விட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தால் இன்னும் ஐந்து வருடங்களாவது இந்த வழக்கு போகுமோ


Ravi
செப் 27, 2025 07:15

ஏதோ ஒரு கொலையில் இது போல தீர்வு வந்தது சரி. இது வரை இது போல் எத்தனை நடந்து இருக்கும்.. கொலை நடந்தது சாட்சிகளை அழித்தது என எல்லாம் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் இப்போதும் தப்பிவிட்டார்கள்


rama adhavan
செப் 27, 2025 07:06

மிக நல்ல தீர்ப்பு. நீதி அரசருக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.


Kasimani Baskaran
செப் 27, 2025 06:36

இத்தனை தடங்கல்களும் இடையில் சமூக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து இருப்பது நீதி சாகவில்லை என்பதை காட்டுகிறது. மேல்முறையீடு, பக்க முறையீடு என்று தண்டனை குறைய வாய்ப்பு இருப்பது போலத்தான் தெரிகிறது.


Senthoora
செப் 27, 2025 07:12

உண்மைதான், ஆனால் சிலவருடம் சிறையில் இருந்தால் அந்த வலி புரியும், கண்டிப்பாக ஓய்வு ஊதியம் இழந்துவிடுவார்கள், அதுவே பெரிய தண்டனை இந்த மாமாக்களுக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை