உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது மேலாளரை மாற்ற வேண்டும் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆவேசம்

பொது மேலாளரை மாற்ற வேண்டும் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆவேசம்

சென்னை : பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் பார்த்திபனை மாற்ற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் முழுதும், மாவட்டத் தலைநகரங்களில் உணவு இ டைவேளை ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள், தலைமை பொது மேலாளரை மாற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டம் குறித்து, அதிகாரிகள், ஊழியர்கள் சங்க இணைப்பு குழுத்தலைவர் நடராஜன் கூறியதாவது: மாநிலம் முழுதும், 13 சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் மாற்றப்பட வேண்டும் என்பது, பிரதான கோரிக்கை. அவர் தலைமை பொது மேலாளராக பொறுப்பேற்று ஓராண்டாகியும், நிறுவனத்தின் வருவாயை உயர்த்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிர்வாக பிரச்னை மட்டுமின்றி, பணியிட மாறுதல் உள்ளிட்ட ஊழியர்கள் பிரச்னையையும் கண்டுகொள்வதில்லை. இது குறித்து, கேள்வி எழுப்புவோர் மீது நிர்வாக ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக மிரட்டி வருகிறார். தற்போது, பி.எஸ்.என்.எல்., சேவை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவற்றை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதே போல், ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் தரும் போலீஸ் சி.யு.ஜி., இணைப்புகள் சேவை குறைபாடு காரணமாக குறைந்து வருகிறன்றன. ஒரு லட்சம் இணைப்புகள் வெளியேறினால், அது நிறுவனத்திற்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு. எனவே, இவர் பொது மேலாளர் பதவியில் இருப்பது, நிறுவனத்திற்கு மட்டுமின்றி ஊழியர்களுக்கும் நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ