உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 4ஜி சேவை விரைவில் துவக்கம்

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 4ஜி சேவை விரைவில் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பி.எஸ்.என்.எல்., நிறுவனம், '4ஜி' சேவையை விரைவில் வழங்க உள்ளது. இதனால், 2ஜி, 3ஜி, சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், சேவை மையத்தில் கொடுத்து, 4ஜி சிம் கார்டை விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்,'' என, பி.எஸ்.என்.எல்., தமிழக வட்டத்தின் தலைமை பொது மேலாளர் தமிழ்மணி தெரிவித்தார்.சென்னையில் நேற்று, அவர் அளித்த பேட்டி:நாட்டின் அனைத்து கிராமங்களிலும், 26,316 கோடி ரூபாய் மதிப்பில், '4ஜி' சேவை வழங்க, 2022 ஜூலை 22ல் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக, தமிழகத்தில், 218 இடங்கள், 516 கிராமங்கள் கண்டறியப்பட்டன. அதில், 185 வருவாய் கிராமங்கள், காடுகள் சார்ந்த எட்டு கிராமங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இனி அனைத்து, 2ஜி, 3ஜி சிம் கார்டுகளையும், 4ஜி சேவை சிம் கார்டுகளாக மாற்ற உள்ளோம். அதனால், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள, 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை அருகில் உள்ள சேவை மையத்தில் கொடுத்து, புதிய சிம் கார்டுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு தமிழ்மணி கூறினார்.

பொங்கலுக்கு சலுகை

 பொங்கல் சிறப்பு சலுகையாக, ஜன., 15 முதல் ஜன., 18 வரை நான்கு நாட்களுக்கு, 150 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்தால், முழு டாக் டைம் வழங்கப்படும் 90 நாட்கள் செல்லும் வகையில், 91 ரூபாய்க்கு சிறப்பு கட்டண வவுச்சர் அறிமுகம் செய்யப்படுகிறது ரூ.2,999 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், அளவில்லா பேசும் வசதி, தினமும், 3ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., வசதியுடன், 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் சலுகை தரப்படுகிறது. வழக்கமாக, 365 நாட்களுக்கு வழங்கும் இந்த சலுகை, 30 நாட்கள் கூடுதலாக தரப்படுகிறது பிரிபெய்டு வாடிக்கையாளர்கள், 'பி.எஸ்.என்.எல்., செல்ப் கேர்' மொபைல் செயலியை பயன்படுத்தி, 249 ரூபாயக்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 2 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சூரியா
ஜன 13, 2024 20:16

என்னது! காந்தி இறந்துவிட்டாரா?


R S BALA
ஜன 13, 2024 14:13

BSNL லில் இந்த சேவைகளெல்லாம் இன்னும் இருக்கிறதா?


Sivagiri
ஜன 13, 2024 11:42

சீ சீ - இந்த பழம் புளிக்கும் - - -


RAMAKRISHNAN NATESAN
ஜன 13, 2024 10:07

பி எஸ் என் எல் மொபைல் இணைப்பு மட்டுமல்ல, பிராட்பேண்ட் போன்ற பல இணைப்புக்கள் தரக்குறைவானவை ..... சிக்கிக்கொள்ளாதீர் ......


spr
ஜன 13, 2024 08:10

பி எஸ் என் எல் நிறுவனத்தை அரசுகளும் அதன் பணியாளர்களும் மனமறிந்து அழிக்கிறார்கள் தனிச் செங்கோல் ஓச்சிய பி எஸ் என் எல் இன்று தனியார் துறைக்கு வெகு தொலைவில் பின் தள்ளப்பட்டதற்கு இவர்களே காரணம் தனியார் துறை 5 G சேவையினையும் தாண்டி 6 G சேவைக்கு சென்றிருக்கையில் பி எஸ் என் எல் இதனைப் பெரியதாகப் பீற்றிக் கொள்வதில் பெருமையில்லை மோடி அரசும் தனியார் சேவைக்கு முன்னுரிமை வழங்குகிறது என்பதால் பி எஸ் என் எல் அழிந்து போகிறது அடுத்து ஆட்சியமைக்கும் காலத்தில் மோடி மலிவு விலையில் மக்கள் பார்க்கும் கேபிள் தொலைகாட்சி இணைப்பையும் ஒழித்து டாடா ரிலையன்ஸ் ஜியோ இவர்களின் ஆதிக்கத்துக்கு வழி வகுப்பார்


NicoleThomson
ஜன 13, 2024 07:47

பிஸ்னல் ஊழியர்கள் கழகத்தினர் போல தான் வேலை செய்கின்றனர்


Ramesh Sargam
ஜன 13, 2024 07:27

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G சேவை துவங்கி, இன்று 6G சேவைக்கு முன்னேறி போகின்றனர்.


ULAGANATHAN P
ஜன 13, 2024 06:58

எத்தனை முறை சொல்லி. தனியாரிடம் பணம் லஞ்சம் பெரு கொள்ளும் பிஎஸ்என்எல் அதிகாரிகள்..


ULAGANATHAN P
ஜன 13, 2024 06:57

Bsnl போது மேலாளர் சொல்லும் செய்தி உண்மையா. தற்போது கால்கள் பேச முடிவதில்லை. நெட் வேலை செய்வது இல்லை. பொது மேலாளர் தொலைபேசி எண் பதிவிடுங்கள். குறைகள் கூற. நிவர்த்தி செய்வதில்லை. ஊழியர்கள்


மொட்டை தாசன்...
ஜன 13, 2024 05:59

பெரு நகரங்களில்கூட 3G நெட்ஒர்க் படு கேவலமாகவுள்ள நிலைமையில், 4G நெட்ஒர்க் தரம் எப்படி இருக்கும் என்பது வெட்ட வெளிச்சம் .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை