உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதன்முறையாக தமிழகத்திற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அவர், தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும் என கூறினார்.தமிழகத்தின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட் சட்டசபையில் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று, அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட, தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழக அரசு வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும். * வலுவான கொள்கையின் காரணமாக தமிழகத்தில் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் உள்ளது. * தமிழகத்தின் தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும். இது தேசிய சராசரியை விட 1.64 மடங்கு அதிகம். * கொரோனா காலத்துக்குப் பிறகு தமிழக சேவைத் துறைகள் வேகமாக மீண்டெழுந்தன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டாலின் பதிவு

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், மக்களுக்கு அரசு வழங்கிய நலத்திட்டங்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட். தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

J.V. Iyer
மார் 14, 2025 04:40

த்ராவிடத்திற்கு தமிழ்நாட்டின்மீது ஏன் அக்கறை? தமிழின்மீது ஏன் அக்கறை? இவர்கள் தமிழர்களா? இல்லையே? தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூவிய பெரியாரின் வழிவந்தவர்கள் ஆயிற்றே இவர்கள்?


தாமரை மலர்கிறது
மார் 14, 2025 01:01

குரங்குகள் கையில் மாட்டிய பூமாலையாக தமிழகம் உள்ளது.


venugopal s
மார் 13, 2025 23:57

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு ஆறரை சதவீதம் தான். ஆனால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதத்துக்கும் கூடுதல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!


venugopal s
மார் 13, 2025 23:54

இந்தியாவின் மக்கள் தொகையில் ஆறு சதவீதம் தமிழகத்தில் உள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் நான்கு சதவீதம் தமிழகத்தில் உள்ளது. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தில் தமிழகத்தின் பங்களிப்பு பத்து சதவீதம் என்ற உண்மையை சங்கிகள் அறிவார்களா?


venugopal s
மார் 13, 2025 23:51

உங்கள் பொருளாதார அறிவு புல்லரிக்க வைக்கிறது.


கத்தரிக்காய் வியாபாரி
மார் 13, 2025 21:50

1500 + 2500 = 5500ன்னு கணக்குபோட்ட முதல்வர் இருக்கிறவரிக்கும் கூட இருக்கிறவங்களுக்கு நல்ல வருமானம்தான்.


Ramesh Sargam
மார் 13, 2025 21:43

தமிழகத்தின் வளர்ச்சி என்று முதல்வர் குறிப்பிட்டது, அவரின் வளர்ச்சி, அவர் குடும்பத்தினரின் வளர்ச்சி, மற்றும் அவருடைய அல்லக்கைகள் வளர்ச்சி. தமிழக மக்கள் வளர்ச்சி என்று நினைத்துவிடாதீர்கள்.


T.sthivinayagam
மார் 13, 2025 21:42

குஜராத் மாடலை பின்னுக்கு தள்ளிய திராவிட மாடல் தலைவா நீ வேற லெவல்


MARUTHU PANDIAR
மார் 13, 2025 21:17

அப்படியே எல்லாக் கோயில்களுக்கும் விபூதி வாங்க ,அறநிலையத் துறைக்கு , அதாவது அன்றே சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெகத்து அண்ணன் சொன்னது போல,மற்றும் விளக்குகளுக்கு திரி நூல் வாங்க, சாம்பிராணி தூபத்துக்கு இதுக்கெல்லாம் எத்தினி கோடி ஒதுக்கீடு அப்படீன்னு மக்கள் பேசிக்கறாங்க .


Ramesh Sargam
மார் 13, 2025 20:35

எனக்குத்தெரிந்து தமிழகத்தின் வளர்ச்சியை இப்பொழுதெல்லாம் டாஸ்மாக் சரக்கு விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை உறுதிசெய்வதுபோல தெரிகிறது.


சமீபத்திய செய்தி