உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடைத்தேர்தல் முடிவு: தலைவர்கள் கருத்து

இடைத்தேர்தல் முடிவு: தலைவர்கள் கருத்து

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து, தலைவர்கள் கருத்து பின்வருமாறு:

ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.,

விக்கிரவாண்டி தொகுதிக்கு அருகில் உள்ள கள்ளக்குறிச்சியில் ஒரு சோக சம்பவம் நடந்தது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதில், அரசியல் சாயம் பூசப்பட்டது. இடைத்தேர்தல் நேரத்தில் எந்த அரசுக்கும் ஏற்படாத சவால்கள் திமுக அரசுக்கு ஏற்பட்டது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத சோதனையிலும் மக்கள் திமுகவை ஆதரித்துள்ளனர். அனைத்து சவால்களையும் முறியடித்து, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு திமுக கூட்டணியின் கொள்கை பலத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். பா.ஜ., மற்றும் பா.ம.க இணைந்து தேர்தலை சந்தித்தது. இது கொள்கையற்ற சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.

பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தெளிவாக முடிவெடுத்து ஓட்டு அளித்துள்ளனர். அ.தி.மு.க.,வின் தலைமையை மீறி தேர்தலில் அக்கட்சியினர் ஓட்டளித்துள்ளார்கள் என்பது நிரூபணம். இது பழனிசாமிக்கு விழுந்த அடி.

திருமாவளவன், விடுதலை சிறுத்தை கட்சி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெறுவார் என முன்பே கணிக்கப்பட்ட ஒன்று தான். அ.தி.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி சென்றது, அரசியல் ரீதியாக அவர்கள் எடுத்த தவறான முடிவு. அ.தி.மு.க.,வை சார்ந்தவர்களும் தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டளித்துள்ளனர். இது தான் தி.மு.க., அதிக வித்தியாச ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிப்பதற்கு காரணம். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு செல்வாக்கு நீடிக்கிறது என்பதற்கு சான்று. எதிர்க்கட்சிகளின் எதிர்மறையான விமர்சனம் மக்களிடம் எடுபடவில்லை.

இனிப்பு வழங்கினார் ஸ்டாலின்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். சென்னையில் தி.மு.க., கட்சி அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்.

தமிழக மக்களின் மனநிலை அல்ல

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்வோம். ஒரு சார்பாக முடிவு இருக்கக்கூடாது என நினைத்தோம். இடைத்தேர்தல் முடிவு தான் தமிழக மக்களின் மனநிலை என நினைத்தால் அது தவறு. இதற்கு முன்பு அப்படி இருந்தது இல்லை இனியும் அப்படி இருக்காது. இடைத்தேர்தல் முடிவு வெற்றிக்கான குறியீடு கிடையாது. இதை நம்பி 2026ல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாது. கடுமையாக களப்பணியாற்றினோம். பா.ஜ., கூட்டணியில் உள்ள பா.ம.க.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Saai Sundharamurthy AVK
ஜூலை 13, 2024 19:23

இவர்கள் எல்லாம் திருடர்கள். இவர்களை போய் தலைவர்கள் என்று எப்படி சொல்ல முடியும் ??? ஜால்ரா கோஷ்டிகள் தான் அவர்களை தலைவர்கள் சொல்வார்கள்.


Bala
ஜூலை 13, 2024 16:54

திருட்டுத் திராவிடத் தெலுங்கு மாதிரியின் 20 கோடிகளில் வளமாக வாழத் தெரிந்த ஊது குழல்கள்?


pv, முத்தூர்
ஜூலை 13, 2024 15:46

புகழ்ந்தல்ல புகார்க்கு பிந்து- கூட்டனி கோஷ்டிகள் அலப்பறை


Mani . V
ஜூலை 13, 2024 15:46

நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாத ஆர். எஸ். பாரதியெல்லாம் ஒரு தலைவரா? சரியான காமெடிதான் போங்க.


Ram pollachi
ஜூலை 13, 2024 15:29

கொலை செய்ய கூலி படை உண்டு, அதுபோல் ஓட்டு போட்டு தள்ள கூலி படை ரெடியோ ரெடி.... லாலா கடை லட்டு கிடைத்தது மகிழ்ச்சி!


Ms Mahadevan Mahadevan
ஜூலை 13, 2024 15:09

கொலை , கள்ள சாராய சாவு எல்லாம் தனி மனித காரணிகள் தேர்தல் அதற்கு அப்பாற்பட்டது. ஒரு கட்சியும் யோக்கியமான து கிடையாது. எல்லா கட்சியிலும் ரவுடிகள்


Rajah
ஜூலை 13, 2024 15:08

தமிழர்கள் ஏமாற்ற மாட்டார்கள். அதிமுகவின் அழிவும் பாஜகவின் அபார வளர்ச்சியும் இந்த தேர்தலோடு உறுதியாகிவிட்டது. ஏமாற்றத் தெரியாத தமிழர்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள் திராவிடம், சமூகநீதி என்ற மாயையில் ஏமாறுகின்றார்கள்


S. Narayanan
ஜூலை 13, 2024 15:02

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பணம். மக்கள் எல்லோருக்கும் தெரியும்


R S BALA
ஜூலை 13, 2024 14:22

அட போங்க


Narayanan
ஜூலை 13, 2024 14:06

இத்துணை இடர்பாடுகளுக்கும் இடையில் மக்கள் ஓட்டளித்துள்ளனர் என்று ஒரு மாயையை உருவாக்கி கொண்டாடுகிறது திமுகவும் அதன் எடுபிடி கூட்டணி கட்சிகளும் அசிங்கம் . அந்த மக்கள் மாக்கள் ஆகிவிட்டார்கள் . கொஞ்சம்கூட மனசாட்சிக்கு இடம் கொடுக்காமல் ஒட்டு போட்டு இருக்கிறார்கள் . பதினாறு அமைச்சர்கள் ஒரு சிறிய இடைத்தேர்தல் , அதுவும் திமுக எம் எல் ஏ இடம்தான் . அதில் என்ன சந்தோஷம். வேறு ஒரு கட்சி எம் எல் ஏ வைத்திருந்ததை இவர்கள் கைப்பற்றி இருந்ததால் சந்தோஷம் சரி எப்போதும் இன்னொரு விஷயம் ஆளும் கட்சிதான் இடைத்தேர்தலில் வெல்லும் . அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எப்படி பணப்பரிவர்த்தனை சாத்தியமாகிறது ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை