உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்.,17ல் மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு : சத்யபிரதா சாஹூ

ஏப்.,17ல் மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு : சத்யபிரதா சாஹூ

சென்னை: தமிழகத்தில் ஏப்.,17 மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 7 மணி வரை பிரசார நேரத்தை நீட்டிப்பு செய்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.தமிழகத்தல் ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாள் (ஏப்.,17) உடன் முடியவுள்ள நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். 19ம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ம் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாளை மறுநாள் (ஏப்.,17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 7 மணி வரை பிரசார நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் ஓட்டளிக்கலாம். விடுபட்டவர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஏப் 15, 2024 22:24

பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டதற்கு இணங்க என்பதை சொல்லாமல் விட்டு விட்டாரோ?


NATARAJAN R
ஏப் 15, 2024 17:13

நமது தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்ய பிரசாத் சாஹூ அவர்கள் வீர வசனம் பேசுவதில் வல்லவர் வருமான வரித்துறை பிடித்தை விடுங்கள் அவர்கள் தங்களுக்கு வரும் தகவல்கள் அடிப்படையில் சோதனை செய்து பறிமுதல் செய்கின்றனர் நமது மேலே குறிப்பிட்ட அதிகாரி திரு சத்ய பிரசாத் சாஹூ அவர்கள் தலைமையில் இயங்கும் பறக்கும் படை தமிழ் நாட்டில் இதுவரை ஒரு அரசியல் கட்சி வாகனங்கள் சோதனை செய்து பணம் பறிமுதல் செய்ய முடிந்ததா? இந்த விவகாரத்தில், கோவை ஆட்சியர், பறக்கும் படை அதிகாரிகள் அனைவருக்கும் "நோட்டீஸ்" அனுப்பியுள்ளார் ஏன் இதுவரை, ஒரு அரசியல் கட்சி வாகனங்கள் கூட சோதனை செய்து பணம் பறிமுதல் செய்ய வில்லை என்று இந்த அதிகாரி, திரு சத்ய பிரசாத் சாஹூ அவர்களை, நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன் கடைசி இரண்டு நாட்கள், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்க அவகாசம் ஒவ்வொரு தேர்தல் நடக்கும் போதும், பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் வேடிக்கை மட்டும் பார்க்கும் புகார் கொடுத்தால், தாமதமாக வந்து சேரும் புகார் கொடுப்பவர் இடம் ஆதாரம் கேட்கும் பெயரளவில் வழக்குகள் தேர்தல் முடிந்தவுடன் அனைத்து வழக்குகளையும் ஊற்றி மூடி விடும் தேர்தல் அதிகாரி அவர்களே வீர வசனம் பேச வேண்டாம் முடிந்தால் மறைந்த முன்னாள் தேர்தல் ஆணையர் திரு ஷேஷன் அவர்கள் எப்படி பணி புரிந்தார் என்பதை தெரிந்து கொண்டு பணியாற்றினால் ஜனநாயகத்தை காக்க முடியும்


என்றும் இந்தியன்
ஏப் 15, 2024 16:51

இன்னும் ரெண்டே நாள் "இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கின்றேன்" என்ற பேச்சு நின்றுவிடும் டிவியில்


Indian
ஏப் 15, 2024 18:12

இன்னும் இரெண்டே நாளில் காங்கிரஸ் இந்தியாவை ஆள போகும் தீர்ப்பு எழுதப்பட உள்ளது


Indian
ஏப் 15, 2024 18:12

இன்னும் இரெண்டே நாளில் காங்கிரஸ் இந்தியாவை ஆள போகும் தீர்ப்பு எழுதப்பட உள்ளது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ