உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: ஜனநாயகம் பற்றி காங்கிரஸ் பேசலாமா?

இது உங்கள் இடம்: ஜனநாயகம் பற்றி காங்கிரஸ் பேசலாமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கே.மணிவண்ணன், நடுபாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் அளித்த பேட்டியில், 'வரும் தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது; ஜனநாயகத்தை காக்க, மக்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.* கடந்த, 1975ல் இந்திரா ஆட்சியில் எமர்ஜென்சியை கொண்டு வந்து, நாடு முழுதும் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, 90 முறை கலைத்தபோது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?* தங்களுக்கு பிடிக்காத மாநில அரசுகளை கலைத்ததன் வாயிலாக சட்டசபைக்கும், பார்லிமென்ட்டுக்கும் ஒரே நேரத்தில் நடந்த தேர்தலுக்கு சாவுமணி அடிக்கப்பட்டதே... அப்போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?* சீக்கிய பாதுகாப்பு வீரர்களால், இந்திரா சுடப்பட்டு இறந்த போது, நாடு முழுதும் கலவர தீயை மூட்டி, அப்பாவி சீக்கியர்கள், 3,000 பேரை கொன்று குவித்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?* இலங்கையில் தம் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?* அதிகாரத்தை மத்தியில் குவித்து வைத்து, மாநிலங்களை கை ஏந்தும் பிச்சைக்காரர்களாக வைத்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?* மிக சிறந்த பொருளாதார மேதையான மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த, 10 ஆண்டு காலமும், அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காத போது, ஜனநாயகம் காக்கப்பட்டதா...?இப்படி, நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட காங்., ஆட்சியில் நடந்த பல ஜனநாயக விரோத செயல்களை பட்டியல் போட்டு கொண்டே சென்றால், பக்கங்கள் போதாது.ஆகவே, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய காங்கிரஸ் கட்சிக்கு, ஜனநாயகத்தை பற்றி பேச சிறிதும் தகுதியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

duruvasar
பிப் 01, 2024 11:41

நீங்க அடுக்கிய காரணங்கள் எதுவுமே தேவையில்லை. கடந்த 14 மாதங்களாக காங்கிரஸ் தலைவராக இருக்கும் இவரால் கட்சி தலைவராக ஏதாவது பேச முடியுமா , செய்மமுடியுமா. முதலில் உங்க கட்சியில் ஜனநாயகத்தை கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.


P.Sekaran
பிப் 01, 2024 11:19

மோடி அமைச்சரவையில் உள்ளவர்கள் மீது ஊழல்புகார் கொடுக்க வேண்டியது தானே வாய் கிழிய பேசுகிறார்கள். கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு இது இடஞ்சலாக இருக்கிறது அதற்கு மோடியை எதிர்கிறார்கள். ஊழல் கட்சிகள் ஒன்று சேர்ந்துதான் ஐஎண்டிஎ கூட்டணை வைத்துள்ளார்கள்.


P.Sekaran
பிப் 01, 2024 10:16

சரியாக சொல்லியிருக்கிறார். ஜனநாயகத்தை வேறோடு புடுங்கியெடுத்தது காங்கிரஸ். இதை சொல்வதர்ற்கு தகுதியில்லை ராகுல்காந்திக்கும் அனைவருக்கும் மோடியை போன்று உலக பொருளாதாரத்தை சிறப்பாகவும் தகுந்த முடிவெடுக்கவும் தகுதியில்லாதவர்கள். இவர்கள் பேச தகுதியிலாதவர்கள்


shyamnats
பிப் 01, 2024 10:09

கார்கேவை பார்த்து ராகுல் மைண்ட் வாய்ஸ் - மாப்பிள்ளை நான்தான் - சட்டை மட்டும் அவருது. கான்கிராஸில் குடும்ப அங்கத்தினர் தவிர்த்து யாருமே தலைமையில் இல்லாத நிலையில் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள். வாய் பேசாத டம்மிகளை சும்மா வைத்திருக்கிறார்கள் - மன்மோஹன் சிங் , கார்கே போல.


Sampath Kumar
பிப் 01, 2024 09:35

அவரு சொன்னதால் எந்த தப்பும் கிடையாது உண்மையை தான் சொல்கிறார் வருமானத்தை வைத்து அரசியல் செய்யும் புல்லுருவிகளுக்கு இது புரியாது ராமராஜ்ஜியம் அமைத்தது என்னத்துக்கு என்று பதில் சொல்லவீர்களா?


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 01, 2024 09:06

தொடர்ந்து தோல்விகளையே மக்களிடமிருந்து பெற்றாலும், மக்களை இன்னும் முட்டாள்களாக காங்கிரஸ் கருதுகிறது ......


VENKATASUBRAMANIAN
பிப் 01, 2024 08:26

புள்ளி கூட்டணியே ஒரு கொள்ள கும்பல். அதான் எல்லாருக்கும் பயம். உளறுகிறார்கள். வடக்கே மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் புரியவில்லை. காசுக்கு ஓட்டு போட்டால இதுதான் கதி. இப்படியே இலவசங்களுக்கு கை ஏந்த வேண்டும். மக்கள் புரிந்து கொண்டால் சரி


பேசும் தமிழன்
பிப் 01, 2024 08:19

இதை தான் மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்ப கூடாது என்று சொல்வார்கள்.. கார்கே சொல்வது அப்படி தான் இருக்கிறது.


A1Suresh
பிப் 01, 2024 07:47

அன்று இங்கே ஓ.பி.பன்னீர்செல்வம் போல அங்கே மன்மோகன் சிங் இருந்தார். இன்று இங்கே கே.எஸ்.அழகிரி போல அங்கே மல்லிகார்ஜுன கார்கே இருக்கிறார். ஆனால் இருவரும் தோற்பார்கள்


R SRINIVASAN
பிப் 01, 2024 07:39

1971-ல் இந்திராவா காமராஜரா என்ற ஒரு நிலையில் காமராஜரை கருணாநிதியுடன் சேர்ந்து கொண்டு தோற்கடித்த புண்ணியவான்கள் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் 15 தொகுதிகளில் உறுதியாக காங்கிரஸ் ஜெயிக்கும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை