உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயிருடன் இருப்பவரை இறந்ததாக கூறலாமா? கோர்ட்டில் ஆஜராக ஆணையருக்கு உத்தரவு!

உயிருடன் இருப்பவரை இறந்ததாக கூறலாமா? கோர்ட்டில் ஆஜராக ஆணையருக்கு உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உயிருடன் உள்ள இலங்கை அகதி இறந்து விட்டதாக, அவரிடமே கடிதம் கொடுத்த அயலக தமிழர் நலத்துறை கமிஷனர், ஜூலை 16ல் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில், இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் உள்ளார். அவரை தங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு, தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையத்துக்கு, உறவினர்கள் கடிதம் கொடுத்து இருந்தனர்.ஆனால், அவர் இறந்து விட்டதாக, அரசிடம் இருந்து அவருக்கே கடிதம் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, கிருஷ்ணகுமாரின் உறவினரான நாகேஸ்வரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு, நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகழேந்தி, ''மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு, நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுஇருந்தது. அதன்பின், இப்படியொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.அப்போது நீதிபதிகள், 'உயிருடன் உள்ள நபர் இறந்து விட்டதாக எந்த அடிப்படையில் அறிக்கை கொடுக்கப்பட்டது?' என, கேள்வி எழுப்பினர்.அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன், ''எங்களுக்கும் இது அதிர்ச்சியாகத் தான் உள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம்,'' என்றார்.இதையடுத்து, அயலக தமிழர் நலத் துறை கமிஷனர், வரும் ஜூலை 16ல் நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 27, 2024 10:42

இறந்ததாக சொல்லப்படுபவர் இலங்கையை சேர்ந்த தமிழர். இலங்கைத்தமிழர் என்று அறிவித்த பின்னரும் நம்ம சைக்கோ அண்ணன் பொங்காம இருக்காரே என்ன காரணம்? ஒருவேளை இருக்கறவரை செத்தவரா சொன்னது திராவிட மாடலா இல்லாம இலங்கை மாடலா இருந்திருந்தா அங்க போயி பொங்கியிருப்பாரோ?


Raa
ஜூன் 27, 2024 10:41

நிர்வாக கோளாறு என்று உருட்டப்போகிறார், வேறு என்ன நடக்கும்? அடுத்த 1 வருடத்திற்கு ஆணையர் என்பதற்கு பதிலாக பூனையார் என்று பட்டம் போட்டுக்கொள்ளலாமா என்று ஆலோசனை நடத்தலாம்


தமிழ்வேள்
ஜூன் 27, 2024 10:32

திருட்டு திராவிடம் இந்தமாதிரி பித்தலாட்டங்களை செய்துதான் , ஊரான் சொத்தை ஆட்டையை போட்டுக்கொண்டிருக்கிறது ......


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 10:22

வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான பெயரை தவறுதலாக கொடுத்திருப்பார். கணினிகள் ரொம்ப சென்சிடிவ். ஒரு எழுத்து மாறினாலும் போச்சு.


duruvasar
ஜூன் 27, 2024 09:40

உயிருடன் இல்லாதவர் ஓட்டு போடுவதில்லையா அது போல்தான் இது. தானிக்கு தீனி சரியாயி போயிந்தி.


karupanasamy
ஜூன் 27, 2024 07:33

கொர சொல்லமுடியாத ஆட்சி இது


Varadarajan Nagarajan
ஜூன் 27, 2024 06:53

தமிழக அரசு நிர்வாகம் எந்த லட்சணத்தில் இயங்குகின்றது. அரசின் பல சலுகைகள் மற்றும் இட ஒதுக்கீடு போன்றவற்றை பெற்று வேலை செய்யும் அரசு அலுவலர்களின் பணி பொறுப்பு இந்த நிலையில்தான் உள்ளது. இதில் அரசு தேர்வுகளுக்கு குறைந்தபட்ச தேர்வுமதிப்பெண்ணை உயர்த்தினால் போராட்டம் வேறு செய்கின்றனர். லஞ்சம் ஒன்றே குறிக்கோள். காசு கொடுத்தால் சட்டவிரோத குடியேறிகளுக்குக்கூட இருப்பிட சான்றிதழ். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஒருவரது சொத்தை மற்றொருவருக்கு பத்திர பதிவு செய்வது, முன்பே இறந்தவருக்கு அரசு நலத்திட்டங்கள் என எல்லாம் கிடைப்பது முன்பு பல வழக்குகளில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. காசு கொடுத்து கடையில் வாங்குவதுபோல உண்மையில் எதைவேண்டுமானாலும் வாங்கலாம்.


raja
ஜூன் 27, 2024 06:23

துக்லக் கோமாளி விடியா மாடல் ஆட்சியில் இது போன்ற கோமாளி தனங்கள் எதுவும் சாத்தியமே....


Duruvesan
ஜூன் 27, 2024 06:11

கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க. யாரவது இறந்தால் ஊரான் காசில் 10 லக்சம் குடுத்தா ஓட்டு வரும், எவனாவது உபி எழுதி குடுத்து ஆட்டைய போட்டு இருப்பான். NDA ல admk சேர்ந்துட்டா நம்ம 23 கட்சி கூட்டணி ???, ஆக முடிஞ்ச அளவு ஆட்டைய போடணும் கட்டுமரம் மீது ஆணை


Palanisamy Sekar
ஜூன் 27, 2024 05:52

பணத்தை கொடுத்தால் இங்கே என்னவேண்டுமானாலும் எப்படிப்பட்ட கடிதம் வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிற நிலைமை இன்னும் மாறவே இல்லை. இறந்தவரின் உடற்க்கூறு பற்றியெல்லாம் விசாரிக்க மாட்டார்களோ? கேவலமாக இல்லையா? கோர்ட் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை