உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சம்சாரம் இல்லாமல் வாழ முடியுமா?: சட்டசபையில் கலகல

சம்சாரம் இல்லாமல் வாழ முடியுமா?: சட்டசபையில் கலகல

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மின்சார தேவை பற்றிய விவாதத்தின்போது, சம்சாரம் - மின்சாரம் இல்லாமல் வாழ முடியுமா என்பது பற்றியும் சுவாரஸ்யமாக பேசப்பட்டதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.தமிழக சட்டசபையின் 2வது நாள் கூட்டம் இன்று (பிப்.,13) நடைபெற்றது. அப்போது மின்சார தேவை குறித்த விவாதத்தின்போது பா.ம.க எம்எல்ஏ ஜி.கே.மணி, ''சம்சாரம் இல்லாமல் மனிதன் வாழலாம், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=swmq891h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கருவறையில் இருந்து கல்லறை வரை மின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மின் தேவை 17 ஆயிரம் மெகா வாட் ஆக இருக்கையில் மின் உற்பத்தி 16 ஆயிரத்து 915 மெகா வாட் ஆக தான் உள்ளது. மீதியிருப்பதை வெளியில் தான் வாங்குகிறோம்'' எனக் கூறினார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ''எம்எல்ஏ மணி, மின்சாரத்தின் தேவையை சிறப்பாக வலியுறுத்தியுள்ளார். துவக்கத்தில் சம்சாரம் இல்லாமல் இருந்துவிடலாம் எனக் கூறினார். அதனை இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் நான் அதை உறுதியாக ஏற்றுக்கொள்வதில்லை எனத் தெளிவுப்படுத்துகிறேன்'' என்றார். அப்போது அவையில் எம்எல்ஏ.,க்கள் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

D.Ambujavalli
பிப் 14, 2024 06:52

ஜெனரேட்டர், யுபி எஸ், பெட்ரோமாக்ஸ், டார்ச் லைட்டெல்லாம் எல்லாமே கைவசம் இருக்க, மின்சாரம் எதற்கு? மனைவிக்கு பொதுவெளியில் இதைவிட அவமதிப்பு இருக்காது


மோகனசுந்தரம்
பிப் 14, 2024 02:57

இதைப் போன்ற வெட்டி பேச்சு பேசுவதற்கு தான் திமுக எம்எல்ஏக்கள் லாயக்கு.


Ramesh Sargam
பிப் 14, 2024 00:29

ஆக, அமைச்சர் தங்கம் தென்னரசு அவர் மனைவியால் ஆளப்படுகிறார் அவரது வீட்டில். ஒரு சில வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டால், UPS, Generator என்று back-up வைத்திருப்பார்கள். அதேபோன்று, ஒரு சிலர் வீட்டில் 'சின்ன வீடு' வைத்திருப்பார்கள். அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு எந்த ரகமோ...??


K.Ramakrishnan
பிப் 13, 2024 18:17

சம்சாரம் இன்றி வாழலாம் என்று சொல்கிறார். அரசியல்வாதிகள் பலருக்கு சின்ன வீடுகள் உண்டு. அந்த அர்த்தத்தில் சொல்லி இருப்பாரோ?


Mohan
பிப் 13, 2024 17:58

அதானே நம்ம பொழப்பே அதுதானே ...அதுக்குதான் ஊர அடிச்சு ஓலைல போட்டு வெக்கிறது ...


ponssasi
பிப் 13, 2024 17:00

இந்த இடத்தில கருணாநிதி இருந்திருந்தால் எதிரியும் ரசிக்குமாறு பதில் சொல்லுவார். இவர்களுக்கு இன்னும் பயிற்சி போதவில்லை


R S BALA
பிப் 13, 2024 16:37

எங்களுக்கும் சிரிப்புதான்யா வருது


வெகுளி
பிப் 13, 2024 15:59

சிரிப்பாய் சிரிக்கும்படி நடந்து கொள்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...


Hari Bojan
பிப் 13, 2024 15:32

யாருக்கு எத்தனை என சொல்லாமல் விட்டாரே


R GANAPATHI SUBRAMANIAN
பிப் 13, 2024 14:37

இந்த மந்திரி திரு அண்ணாமலை லிஸ்ட்ல இருக்காரா, இல்லையா... ஒரு டவுட் தானுங்கோ.


P. SIV GOWRI
பிப் 13, 2024 16:34

நிச்சயமா இல்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை