உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுப்பு டி.ஜி.பி., நியமனத்தை எதிர்த்து வழக்கு: செப்.8ல் விசாரணை

பொறுப்பு டி.ஜி.பி., நியமனத்தை எதிர்த்து வழக்கு: செப்.8ல் விசாரணை

சென்னை:தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பதவி வகித்த சங்கர் ஜிவால் செப்.,31 ஓய்வு பெற்றார். பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமனை நியமித்து உள்துறை செயலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரும், வழக்கறிஞருமான ஆர்.வரதராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது: டி.ஜி.பி., ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும். அப்பட்டியலில் இருந்து மூன்று அதிகாரிகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து மாநில அரசுக்கு அனுப்பி வைக்கும். அந்த மூவரில் ஒருவரை மாநில அரசு டி.ஜி.பி.,யாக நியமிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய நேரத்தில் அதிகாரிகள்பட்டியலை அனுப்பாத தமிழக அரசு டி.ஜி.பி., பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலை அரசுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பில்,நிர்வாக பிரிவு டி.ஜி.பி.,யாக இருந்த வெங்கட்ராமனை பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமித்துள்ளது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. வெங்கட்ராமன்நியமிக்கப்பட்டதை ரத்து செய்து நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நடைமுறைகளை துவங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை மூத்த அதிகாரிகளில் ஒருவரை டி.ஜி.பி., பொறுப்பை கவனிக்கும்படி உத்தரவிட வேண்டும். பொறுப்புடி.ஜி.பி.,யாக வெங்கட்ராமன் பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் செப்.8ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !