உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்கள் மீதான வழக்கு: பிப்.,5 முதல் உயர்நீதிமன்றம் விசாரணை

அமைச்சர்கள் மீதான வழக்கு: பிப்.,5 முதல் உயர்நீதிமன்றம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டார் மீதான மறு ஆய்வு வழக்குகளில் பிப்.,5 முதல் தினசரி பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.அரசியல்வாதிகள் மீதான மறு ஆய்வு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான மறு ஆய்வு வழக்குகளில் பிப்.,5 முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.அதேபோல், அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு பிப்.,12, 13 தேதிகளிலும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்.,19 முதல் 22ம் தேதி வரையிலும் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் வழக்குகளால் மற்ற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த வழக்குகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்கு மேல் விசாரணை துவங்கும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் விளக்கத்தை ஜன.,30ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ganapathy Subramanian
ஜன 09, 2024 10:41

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யென பெய்யும் மழை. திரு ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் வழக்கை மறுபடியும் விசாரிக்க போகிறேன் என்றவுடனேயே இந்த வருடம் மழை சராசரிக்கு அதிகமாக பெய்திருக்கிறது. அவருடைய நியாயமான தீர்ப்பு வந்தவுடன், தமிழகம் பிற மாநிலங்களிடம் தண்ணீருக்காக கையேந்துவது குறையும் போல இருக்கிறதே?


jagan
ஜன 08, 2024 22:47

பொன்முடி மட்டும் தான் விடுதலை(Acquittal ) ஆனவர். மற்றவர்கள் கீழமை கோர்ட்டுகளில் வழக்கே நடத்தாமல் வெறும் 'விடுவிப்பு' (Discharge ) குடுத்துளார்கள், எனவே பொன்முடி வழக்கில் இவர் தீர்ப்பு அளிக்கலாம். அனால் மற்ற வழக்குக்குகளில் இவர் தீர்ப்பு சொல்ல அதிகாரம் உள்ளதா? இல்லை கீழமை கோர்ட்டுக்கு மறுவிசாரணை என்று திருப்பி அனுப்புவாரா ? யாரவது விபரம் தெரிந்தவர்கள் விளக்கினால் நலம்.


sankaranarayanan
ஜன 08, 2024 22:46

நீதிமன்றம் சீக்கிரமே எல்லா வழக்குகளையும் எடுத்து வாய்தா இல்லாமல் விசாரணை செய்து குறுகிய காலத்துக்குள்ளேயே இந்த வழக்குகளை முழுவதுமாக முடித்துவிட வேண்டும் வருஷக்கணக்கில் போகக்கூடாது வெட்டு ஒன்று துண்டு இரன்டு என்ற கொள்கையை கடைப்பிடித்து கணம் நீதி அரசர் பாராளுமன்ற தேர்தல் வருமுன்னே எல்லா வழக்குகளையும் முடித்துவிட்டால் மக்கள் நிம்மதி அடைவார்கள்


theruvasagan
ஜன 08, 2024 21:54

இங்கு நடக்கும் ஆட்சி எந்த கொம்பனாலயும் குறை சொல்ல முடியாத ஆட்சி. குறை சொல்றவங்க இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் கொம்பு இல்லாதவங்க.


P.Sekaran
ஜன 08, 2024 20:33

துறையில்லாத அமைச்சர்கள் வரிசையாக வருவார்கள் அதற்கு மு அமைச்சரும் மக்கள் வரி பணத்தில் சம்பளம் கொடுப்பார். பொங்கல் பரிசு கொடுக்க ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு கொடுக்க தயங்குவார்கள். சரியான நேர்மையான ஆட்சி எல்லோரும் நம்பி விட்டோம் அடுதது உங்கள் ஆட்சிதான். இங்கு ஏகப்பட்ட பேர் தங்கள் விசுவாசிகளாக ஏமாந்தவர்கள் ஏராளம்பேர் உள்ளார்கள் ஏமாந்தவர்கள் இருக்கிற வரைக்கும் உங்களை அசைக்க முடியாது. வறுமையில் கொள்கைக்காக இருக்கிறவர்கள் இன்னும் சில பேர் உலா வருகிறவரை உங்கள் கொடி பறக்கும் எல்லோரும் ஒரு நாள் உணர்வார்கள் அப்பொழுது கட்சி காணாமல் போய்விடும்


Duruvesan
ஜன 08, 2024 20:31

ஆக இலகா இல்லாத அமைச்சர் ரெடி


A1Suresh
ஜன 08, 2024 20:05

மைக்கேல் குன்ஹா எங்கிருந்தாலும் உடன் வரவும்


jagan
ஜன 08, 2024 20:28

தேவையில்லை. ஆனந்த் வெங்கடேஷ் போதும் . குன்ஹா 100 கோடி அபராதம் என்று சொல்லி தன் வெறுப்பை காட்டியவர், நடு நிலையாளர் இல்லை


jagan
ஜன 08, 2024 20:33

பொன்முடி மட்டும் தான் விடுதலை(Acquittal ) ஆனவர். மற்றவர்கள் கீழமை கோர்ட்டுகளில் வழக்கே நடத்தாமல் வெறும் 'விடுவிப்பு' (Discharge ) குடுத்துளார்கள், எனவே பொன்முடி வழக்கில் இவர் தீர்ப்பு அளிக்கலாம். அனால் மற்ற வழக்குக்குகளில் இவர் தீர்ப்பு சொல்ல அதிகாரம் உள்ளதா? இல்லை கீழமை கோர்ட்டுக்கு மறுவிசாரணை என்று திருப்பி அனுப்புவாரா ? யாரவது விபரம் தெரிந்தவர்கள் விளக்கினால் நலம்.


M Ramachandran
ஜன 08, 2024 19:38

அது தன கோல்மால் சுந்தரம் பிள்ளை வேலை திண்டுக்கல்லில் செய்தாய் ஆய் விட்டதெ இருந்த ஆவணனங்க்ளை சூறையாடி கிழித்து போட்டு ஆனந்த பரவசம் ஆடி நர்த்தனம் ஆடி நார்களெ அப்புறம் கேசு எப்படிநிற்கும்?


Parthasarathy Badrinarayanan
ஜன 08, 2024 19:08

அருமையான ஆனந்தமான செய்தி. ஆளும் கட்சி அமைச்சர்களானதால் நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத ஜால்ரா துறையின் கேவலம் மக்களுக்குத் தெரியவேண்டும்


VENKATASUBRAMANIAN
ஜன 08, 2024 19:06

முன்பெல்லாம் தார்மீக அடிப்படையில் தாங்கள் ராஜினாமா செய்து விடுவார்கள். குற்றமற்றவர்கள் என்று நிரூபித்த பின்னர் பதவிக்கு வருவார்கள். அத்வானி அப்படித்தான் செய்தார். ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் இதை விட எதிர் பார்க்க முடியாது.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ