சீமான் வீடு முற்றுகை 878 பேர் மீது வழக்கு
சென்னை:சீமான் வீட்டை முற்றுகையிட முயன்று, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், தீ வைத்து கொளுத்தியது தொடர்பாக, 878 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ஈ.வெ.ராமசாமி குறித்து பேசியதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை த.பெ.தி.க., பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சீமானின் உருவ பொம்மையை கொளுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது தொடர்பாக, நீலாங்கரை போலீசார், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 878 பேர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீ வைத்து கொளுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.