உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரசிகரை துாக்கி வீசிய சம்பவம் நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு

ரசிகரை துாக்கி வீசிய சம்பவம் நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு

பெரம்பலுார்: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மற்றும் அவருடைய பவுன்சர்கள் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் குன்னம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அருகே பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார், 24, மதுரையில் நடந்த த.வெ.க., மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, நடைமேடையில் நடந்து வந்த விஜயை பார்த்த ஆர்வத்தில் நடைமேடையில் ஏறினார். இதைப் பார்த்த பாதுகாப்பு பவுன்சர்கள் இரண்டு பேர், விஜய் முன்னிலையில் சரத்குமாரை துாக்கி கீழே வீசினர். இதில் காயமடைந்த சரத்குமார், பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று முன்தினம் தன் தாயுடன் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில், 'நடிகர் விஜயை பார்க்கும் ஆர்வத்தில் தான், மதுரையில் நடைபெற்ற த.வெ.க., மாநாட்டுக்கு சென்றேன். அப்போது, மாநாட்டு மேடைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் விஜய் நடந்து வந்தார்; ஆவலில், அந்த நடைமேடை மீது ஏறினேன். 'உடனே, விஜயுடன் பாதுகாப்புக்கு வந்திருந்த பவுன்சர்கள் என்னை சூழ்ந்து கொண்டு, என்னை பிடித்து, மேடையில் இருந்து கீழே துாக்கி வீசினர். இதனால், என் நெஞ்சு, முதுகு பகுதிகளில் பலத்த உள்காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் ஊருக்கு வந்த என்னை, பெரம்பலுார் பகுதி த.வெ.க., நிர்வாகிகள் தொடர்பு கொண்டனர். 'இதை பெரிய பிரச்னையாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனரே தவிர, காயம் அடைந்த எனக்கு உதவி செய்ய, அவர்கள் தயாராக இல்லை. என்னை துாக்கி வீசும்போது, அனைத்தையும் அருகில் இருந்து விஜய் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு கொடுங்காயம் ஏற்படுத்திய விஜய் மற்றும் அவருடைய பவுன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி., அலுவலக அதிகாரிகள், அதை குன்னம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில், நடிகர் விஜய் உள்ளிட்ட அவருடைய பவுன்சர்கள் மீது, மூன்று பிரிவுகளின் கீழ், குன்னம் போலீசார் வழக்கு பதிந்தனர். பின்னர், இந்த சம்பவம் நடந்த இடம் மதுரை என்பதால், விஜய் உள்ளிட்டோர் மீதான வழக்கை, மதுரை போலீசாரின் விசாரணைக்கு மாற்றினர். தமிழக வெற்றிக் கழகம் துவங்கிய பின், அக்கட்சித் தலைவர் விஜய் மீது பதிவாகியுள்ள முதல் குற்ற வழக்கு இது. இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக நடிகர் விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

joe
ஆக 29, 2025 20:02

kuppai


joe
ஆக 29, 2025 20:02

அரசியல் தேச தேச துரோகிகளுக்கு வணக்கம் சொல்கிறது


joe
ஆக 29, 2025 19:53

நாட்டின் இறையாண்மையை ,இந்து மதத்தையும் அதன் ஒரு பகுதியான சனாதனத்தையும் அவமதித்த தமிழக துணை முதல்வரை கைது செய்யாமல் தண்டிக்காமல் இருப்பது மக்களுக்கு ஒரு சட்டம் அரசியல் வாதிக்கு ஒருசட்டமா ?சுப்ரீம் கோர்ட்டே நாட்டின் இறையாண்மையை மதிக்காதது நீதித்துறையின் மானங்கெட்ட போக்கை நிலை நிறுத்துகிறது .


baala
செப் 29, 2025 10:59

கருத்து உள்ள வழக்குக்கு நடவடிக்கை வேண்டும் இல்லையா.


joe
ஆக 29, 2025 19:48

ஆளும் அரசியல் வாதியின் குடும்பத்துக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டமா ?நாட்டின் இறையாண்மை என்னாவது ?


joe
ஆக 29, 2025 19:17

இந்து மதத்தையும் அதன் ஒரு பகுதியான சனாதனத்தையும் அவமதித்த தமிழகத்தின் துணை முதல்வர் மீது 100 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க சொல்லியும் சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்காதது நீதி துறையின் மாண்பையும் இந்திய நாட்டின் இறையாண்மையும் சுப்ரீம் கோர்ட்டே அவமதித்தது நாட்டின் இறையாண்மைக்கு நல்லதல்ல .அரசியல் வாதிக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்கிற பாணியில் நீதி துறை செல்வது நாட்டின் இறையாண்மைக்கு நல்லதல்ல.


joe
ஆக 29, 2025 17:04

.அரசியல் வாதிக்கு ஒரு சட்டம், பொது மக்களுக்கு ஒரு சட்டமா ? விஜய் கூட்டத்தில் தவறு ஏற்படுத்த அரசியல் ஊழல் ரவுடிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள் .


joe
ஆக 28, 2025 18:07

சனாதனத்தையும் இந்துமதத்தையும் தாக்கி ப்பேசிய தேச துரோகிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியாதா / அந்த தேச துரோகிக்கு துணை முதல்வர் பட்டம் கொடுத்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்புகிறான் .இதை கவனிக்காமல் சுப்ரீம் கோர்ட்ம் அந்த தேச துரோகியை அடையாளம் கண்டும் சும்மா இருக்கிறது .50க்கும் மேற்பட்ட பெரிய பெரிய பிரபலங்கள் புகார் செய்தும் சுப்ரீம் கோர்ட் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது .இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா ?நீதி துறையே தேச துரோகிகளுக்கு தண்டனை வழங்காமல் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு சோதனையை உள்ளது . விஜய்க்கு அரசாங்கம் "z" பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக மீடியா செய்தி உள்ளது .தவறு செய்யாத விஜய் மீது குற்றம் சொல்வது சரியானதல்ல .பவுன்சர்கள் செக்யூரிட்டி போன்றவர்கள் ,அவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்திருக்கிறார்கள் .இது குற்றம் ஆகாது .எல்லோரும் கீழே இருக்க அந்த பையன் மட்டும் மூங்கில் கழியில் ஏறி ஏன் மேடைக்கு வரவேண்டும் .அவனால் விஜய்க்கு எதாவது நேர்ந்திருந்தால் குறை சொல்லும் நீங்கள் பொறுப்பாவீர்களா ?அந்த பையனின் தாய் பேசிய பேச்சுக்களும் சரியானதல்ல .விஜய் மீது தவறில்லை .News By Master Joe .விஜய் மீது தவறில்லை .


joe
ஆக 28, 2025 14:39

இதில் விஜய் மேல் தவறில்லை .


joe
ஆக 28, 2025 14:34

இதில் பவுன்சர்கள் செக்யூரிட்டி போன்றவர்களே ஆவார்கள் .அவர்கள் தங்கள் வேலையை சரியாகத்தான் செய்திருக்கிறார்கள் .இதில்விஜய் குற்றவாளி இல்லை .அந்த பையன் மூங்கில் கழி மூலம் மேடை எறியதே தப்புதான் .அந்த பையனின் அம்மா பேசிய பேச்சுக்களும் தவறுதான் .விஜய்க்கு அரசாங்கமே "ழ்"பாதுகாப்பு கொடுத்துள்ளதாக மீடியா செய்தியும் இருக்கிறது .இதில் விஜய் குற்றவாளி என்பது பெரும் தவறு ..


joe
ஆக 28, 2025 13:41

பவுன்சர்கள் செக்யூரிட்டி போன்றவர்களே ஆகும் .அதனால் இதை தவறு என்று சொல்ல வாய்ப்பு இல்லை .ஒருவேளை அந்த பையனால் விஜய்க்கு ஏதாவது நேர்ந்திருந்தால் குற்றம் சொல்லும் நீங்களெல்லாம் அதற்கு பொறுப்பாவீர்களா ?.பவுன்சர்கள் செக்யூரிட்டி போன்றவர்கள் அவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள் .தவறு எங்கே எப்படி என்றால் எல்லோரும் கீழே காத்துக்கொண்டிருக்க இந்த பையன் மட்டும் ஏன் மூங்கில் கழி மேல் ஏறி மேடைக்கு வர வேண்டும் .இந்த பையனால் விஜய்க்கு எதாவது நேர்ந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வீர்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை