உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் கூட்டத்தில் ஜாதி மோதல்; பாதியில் வெளியேறிய இளைஞர்கள்

சீமான் கூட்டத்தில் ஜாதி மோதல்; பாதியில் வெளியேறிய இளைஞர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி : திருநெல்வேலியில் நடந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஜாதி ரீதியாக மோதல் ஏற்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்டோர் வெளியேறினர்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்டம் தோறும் சென்று, நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டங்களை நடத்துகிறார். நேற்று முன்தினம் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கலந்துரையாடல் முடிந்த நிலையில், நேற்று திருநெல்வேலியில் திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது.இளைஞர் அணி பாசறையை சேர்ந்த பார்வின் என்பவர் சீமான் பேசியபோது, தமக்கு ஒரு கருத்து இருப்பதாகக் கூறினார். அதற்கு சீமான்,'' ஜாதி ரீதியாக முகநுாலில் பதிவிட்டவன் தானே நீ உட்கார்; பேசாதே,'' என்றார்.திருநெல்வேலியில் ஒரு ஜாதி தலைவரின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலையிடும் சீமான், இன்னொரு தலைவரின் பிறந்த நாளில் சிலைக்கு மாலையிடாதது ஏன் என பார்வின் முகநுாலில் பதிவிட்டு இருந்தார். ''இதை வைத்தே, சீமான் பார்வின் மீது கோபப்பட்டுள்ளார். தொடர்ந்து, ''இது என் கட்சி... விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம்,'' என சீமான் கூறியுள்ளார். ''கடையநல்லுாரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் இரண்டாம் கட்ட தலைவரான சாட்டை துரைமுருகன் பேசுகையில், ஒரு ஜாதியை புகழ்ந்து பேசியுள்ளார். அப்படியானால், நாங்கள் ஏன் ஜாதி குறித்து முகநுாலில் பதிவிடக்கூடாது,'' என அந்தோணி விஜய் என்பவர் கேட்டார். அவரை சாட்டை துரைமுருகன் ஆதரவாளர்கள் தாக்க பாய்ந்துள்ளனர். இதனால் பார்வின், அந்தோணி விஜய், ஞானராஜ் உள்ளிட்ட இளைஞர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.பின் அந்தோணி விஜய் கூறுகையில், ''நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தரப்பினரின் பிடியில் உள்ளது. இனிமேல், இங்கு கட்சி வளராது. இதை கலந்துரையாடலில் கருத்தாக தெரிவிக்க சீமான் அனுமதிக்க மறுத்து விட்டார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Jebamani Mohanraj
நவ 16, 2024 10:14

சீமான் தமிழரா? அவர் உண்மையில் தமிழராக இருந்திருந்தால் இப்படி ஜாதி பாகுபாட்டை தூண்ட மாட்டார் அவர் திராவிட மாடல் ஆள்


Rajesh Nandakumar
நவ 15, 2024 18:12

சீமான் ஒரு சர்வாதிகார மணம்பான்மை உடையவர். அவர் கட்சியிலேயே ஜனநாயகம் கிடையாது. பின் ஆட்சியில் எப்படி இருக்கும்?


Thangaraju Inspector
நவ 15, 2024 17:51

அகம்பாவம் பிடித்தவர் சீமான். தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்றால் மற்ற கட்சிகளை விமர்சிக்கவும் கருத்து சொல்லவும் தகுதி இல்லை.


Murthy
நவ 15, 2024 14:19

வெளியேறியவர்கள் நாடார் சாதியினர்......நாடார் கட்சி என்ற முத்திரையை குத்துபவர்களுக்கு சவுக்கடி...


Arasan Arasan
நவ 15, 2024 14:06

எந்த கட்சியும் சாதிவெறியர்களை கொண்டதுதான் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது


Murthy
நவ 15, 2024 14:00

நாம் தமிழர் சீமான் இதை தவிர்த்து அரசியல் செய்யமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது ....


Rengaraj
நவ 15, 2024 13:54

ஜாதி வாக்குகளுக்கு அரசாங்கமும் கட்சிகளும் முக்கியத்துவம் தருகின்றன, தங்கள் ஜாதியை அவை சமூகத்தில், அரசு வேலையில், அரசு திட்டங்களில் புறக்கணிக்கின்றன என்று சொல்வதாக கருதப்படும் அந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியிலேயே பொருளாதார காரணிகளை முன்னிறுத்தி அந்த ஜாதியினரே அவர்களுக்குள் சமமாக நடத்தப்படவில்லை என்பதை ஜாதி பிரிவினை என்று ஓலமிடும் அரசாங்கமும் அந்த அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் கூட்டணி கட்சிகளும் சமூக நீதி பேசும் அறிவுஜீவிகளும் உணரவில்லை. அப்படியே அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் தங்கள் முகமூடி கிழிந்துவிடும் என்று வாக்குவங்கிக்காக வெளியில் பேசுவதில்லை.


Barakat Ali
நவ 15, 2024 13:09

வரும் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இரண்டே இரண்டு கட்சிகள்தான் .... ஒன்று திமுக ..... இன்னொன்று பாஜக ..... பாஜகவைத் தவிர வேறு எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் அதனால் திமுக மட்டுமே ஆதாயம் பெறும் .... ஆகவே வாக்குகளை வீணாக்கிவிடக் கூடாது .....


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 15, 2024 12:03

ஒன்றாம் வகுப்பு முதல் வேலைக்கு சேர்ந்து பதவி உயர்வு பெற்று ரிட்டையர் ஆகும் வரை எல்லா நிலைகளிலும் ஜாதி அடிப்படையில் வைத்துக்கொண்டு ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எப்படி ஜாதி ஒழியும். ஆனால் திருமணம் செய்யும் போது மட்டும் ஜாதி பார்க்க கூடாதாம். ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று குழந்தைகளிடம் கூறிய கவிஞன் உயர் ஜாதி என்று கூறி தீண்டாமை கொண்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள் தமிழ் வளர்த்துக் கொண்டு உள்ள தமிழர்கள்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 15, 2024 11:10

ஜாதி மோதல் எல்லாம் ஒன்றுமில்லை. விஜயின் கட்சில வேறு கட்சில சேர விரும்புபவர்கள் தெரிவிக்கும் உப்பு சப்பில்லாத காரணங்கள் இவை. திராவிடத்துக்கு சீமானை கண்டால் பயம். மேலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும் ஓட்டு சதவீதமும் அதிகரித்து வருகிறது. எனவே, எப்படியாவது சின்ன தத்தியை ஆட்சி கட்டிலில் அமர வைத்துவிட வேண்டும் என்று துடிக்கும் திருட்டு திராவிடத்திற்கு சீமான் தடையாக இருப்பார் என்ற பயம். அதனால், தேவையற்ற காரணங்களை சொல்லி சீமான் மீதும் நாம் தமிழர் கட்சியின் மீதும் அவதூறு பரப்பி வருகின்றனர். சீமான் ஒரு அன்பான சர்வாதிகாரி. அதுதான் தேவை நமது நாட்டிற்கு. இல்லையேல் இந்த மக்களை ஒரு போதும் திருத்த முடியாது. எல்லாமே திராவிடத்தால் ஏற்கனவே கரப்டட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை