உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சப்பணத்துடன் சிக்கினார் பெண் சார் பதிவாளர்: 13 லட்சம் ரூபாய் பறிமுதல்

லஞ்சப்பணத்துடன் சிக்கினார் பெண் சார் பதிவாளர்: 13 லட்சம் ரூபாய் பறிமுதல்

கோவை: பதிவு செய்த பத்திரத்தை விடுவிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின், இளநிலை உதவியாளர் பூபதி ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சார் பதிவாளர் காரில் கணக்கில் வராத ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக சென்றார். பத்திரப்பதிவு முடித்த நிலையில் தனது அசல் பத்திரங்களை விடுவிக்க கோரினார். பத்திரத்தை விடுவிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின் கேட்டார்.இதன்படி, கருப்புசாமியிடம் இருந்து ரூ.35 ஆயிரம் லஞ்ச பணத்தை வாங்கிய இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவை , லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். விசாரணையில், நான்சி நித்யா கரோலின் கூறியதன் பேரில் லஞ்சம் வாங்கியதை அவர் ஒப்புக்கொண்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின் காரில் இருந்த கணக்கில் வராத 13 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Suresh Gandhi
அக் 12, 2024 08:50

இயற்கைக்குப் புறம்பான சமூக அமைப்பு அதாவது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், இந்த ஐந்தில் ஒன்றான நிலப்பரப்பை தனி உடமைக்கு விட்டுவிட்ட சமூக அமைப்பு, அதை நிர்வகிக்கும் நிர்வாக கட்டமைப்பு, இதில் ஊழலும் லஞ்சமும் தவிர்க்க முடியாதவை. நிர்வாகத்தை மாற்றும் அரசியலை தாண்டி சமூகத்தை மாற்றும் அரசியலை முன்னெடுக்கும் போது மட்டுமே அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாக இருக்க முடியும்.


Akilam
அக் 11, 2024 23:12

No comments.


Akilam
அக் 11, 2024 23:09

நீங்களே நிராகரிக்கிறீர்கள்.பின் எங்கு சொல்வது.நடப்பதை யாராலும் தடுக்கமுடியாது.


Akilam
அக் 11, 2024 23:05

அமைச்சர் ப்பு செய்துவிட்டு 475 நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளிவருகிறார் அவருக்கு 48 மணிநேரத்தில் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இவர்கள் என்ன செய்வார்கள். இவர்களுக்கும் மேலிடத்திற்கு பணம் போகவேண்டும் என்றால் இவர்கள் சம்பளத்தொகையை கொடுப்பார்களா. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.கோடி கோடியாய் பணத்தை வைத்துக்கொண்டு என்னசெய்ய போகிறார்கள்.


Ramakrishnan
அக் 11, 2024 17:59

தமிழ் நாட்டில் எந்த அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கவில்லை? வி. ஏ. ஓ, முதல் தாசில்தார் அலுவலகம் வரை, காவல் துறை, பத்திர பதிவு, ஆர். டி. ஓ, மின்சார துறை, மாநகராட்சி, நீதிமன்றங்கள், இப்படி அனைத்து துறைகளிலும் லஞ்சம் தான் தலை விரித்து ஆடுகிறது. ஊழல் செய்து மாட்டினாலும் அங்கும் பணம் கொடுத்து தப்பிப்பது இங்கு சாதாரண விஷயம். ஊழல் செய்யாமல் இருக்க நினைத்தாலும் முடியாத நிலை தான் உள்ளது. இந்த ஊழல் மந்திரிகளில் ஆரம்பித்து கடை நிலை வரை அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே ஆகிவிட்டது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல இவர்களாகவே திருந்தாத வரை இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஒரு சில நல்லவர்களால் இந்த பல்லாயிரம் ஊழல் வாதிகளை திருத்த முடியாது. இயற்கை உடனுக்குடன் தண்டித்தால் தான் இவர்கள் மாறுவார்கள்.


Gajageswari
அக் 11, 2024 13:15

மேல் நடவடிக்கையக பதவி உயர்வு வழங்கப்படும்


Jayachandran
அக் 10, 2024 23:14

ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் எந்த பத்திரப்பதிவு -க்கும் லஞ்சம் இல்லாமல் சார் பதிவாளர்கள் கையெழுத்து போட மாட்டார்கள். முதலில் இங்கு வந்துட்டு போங்க நேர்மையான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவர்களே...


தமிழன்
அக் 11, 2024 15:18

ஆவடி மட்டுமல்ல தமிழ்நாட்டின் 99% சார் பதிவாளர் அலுவலகங்களில் இதுதான் நிலை.


Jysenn
அக் 10, 2024 00:35

Another one is minting money from the Panakudi sub registrar office of Tirunelveli district. Please do the needful. Sarvam Selvi mayam.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை