உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாராய பலிகள் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை வலுக்கிறது! : சபையில் அமளி, வெளியே ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

சாராய பலிகள் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை வலுக்கிறது! : சபையில் அமளி, வெளியே ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

சென்னை: கள்ளக்குறிச்சி சாராய பலிகள் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இவ்விவகாரத்தில் சட்டசபையில் அமளியும், வெளியே கட்சிகளின் ஆர்ப்பாட்டமும் தொடர்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்த 160க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 31; புதுச்சேரி ஜிப்மரில் மூன்று; சேலம் அரசு மருத்துவமனையில் 17; விழுப்புரம் மருத்துவமனையில் நான்கு பேர் என, 55 பேர் இறந்துள்ளனர்; 21 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j7w4tt37&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நடவடிக்கை

இச்சம்பவம் தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மையப் பகுதியில் போலீஸ் நிலையம், போலீஸ் எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலேயே கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள், போலீசார் உதவியின்றி இவ்வாறு நடக்க சாத்தியமில்லை என்று பலரும் கூறுகின்றனர்.சம்பவம் நடந்ததும், கலெக்டர் மாற்றம், எஸ்.பி., உட்பட போலீசார் தற்காலிக பணிநீக்கம், வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் என, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும், இறப்பு அதிகம் என்பதாலும், வெளி மாநிலத்தவர் தொடர்பு இருப்பதாலும், இவ்வழக்கை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., விசாரித்தால் தான் அனைத்து உண்மைகளையும் கண்டறிய முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 'இவ்வழக்கை தமிழக அரசு விசாரித்தால், உண்மைகள் வெளி வராது. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். அவரது கட்சியினர் தமிழக அரசை கண்டித்து, நேற்று மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; பலர் கைது செய்யப்பட்டனர்.

அரசு தயக்கம்

அ.தி.மு.க., பொதுச்செயலரும் இதே கோரிக்கையை இரண்டு நாட்களாக வலியுறுத்தி வருகிறார். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, சபையிலும் வெளியிலும் இதை கோஷமாக எழுப்பி வருகிறார். வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க அரசு தயக்கம் காட்டக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சாராய விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து, சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் இரண்டாம் நாளாக நேற்றும் அமளியில் ஈடுபட்டனர்; வெளிநடப்பும் செய்தனர். சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க., இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.பா.ம.க., தலைவர் அன்பு மணியும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி உள்ளார். கடிதம் வாயிலாக அண்ணாமலை தெரிவித்த தகவல்களையும், உளவுத்துறை தொகுத்து அனுப்பிய ஆவணங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அரசு வட்டாங்கள் தெரிவித்தன.

'இதுதான் ஒரே வழி'

தினமும் மக்கள் இறக்கின்றனர். எத்தனை பேர் மது அருந்தினர்; சிகிச்சைபெறுவோர் நிலை என்ன என்ற விபரங்களை, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, சட்டசபையில் பேச அனுமதி கேட்டோம்; தரவில்லை. சாராய விற்பனை, காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்காது. தி.மு.க., கவுன்சிலர் இருவருக்கு தொடர்பு உள்ளது. தி.மு.க., மாவட்ட செயலர், முக்கிய பங்கு வகிக்கிறார். அவர்களை விசாரிக்க வேண்டும். காவல் துறை மீதே புகார் இருப்பதால், அவர்கள் விசாரித்தால் நீதி கிடைக்காது. எனவே, சி.பி.ஐ., விசாரணை கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளோம். அது தான் ஒரே வழி. முதல்வருக்கு தைரியம் இருந்தால், நாங்கள் பிரச்னையை எழுப்பிய போது, பதில் அளித்திருக்க வேண்டும். அவர் இன்னும் ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை?

பழனிசாமி

அ.தி.மு.க., பொதுச்செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

A
ஜூன் 23, 2024 23:03

Article 356 should be used to eradicate STUPID VIDIYAL KUMBAL


A
ஜூன் 23, 2024 23:02

356 should be used to eradicate VIDIYAL KUMBAL


PREM KUMAR K R
ஜூன் 23, 2024 22:09

(விஷம் கலந்த) சாராயம் குடித்து மரணம் அடைந்தோருக்கு அரசு பணத்திலிருந்து வாரி வழங்கும் முதல்வரின் வேகம், மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை தண்டிப்பதில் காடட்டாதது ஏன் என அதிர்ச்சியில் உள்ள மக்கள் கேட்கிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற தி.மு.க உதவியதற்கு நன்றி கடனாக மவுன விரதம் மேற்கொண்டுள்ளன. கூட்டணிக்கு வெளியே இருந்து ஜால்ரா போடும் கமல்ஹாசன் "மிதமாக குடிக்கும்படி" அறிவுரை கூறியதன் மூலம் அவரது அறிவு திறன் எவ்வளவு வேகமாக குறைந்து வருகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது .


M Ramachandran
ஜூன் 23, 2024 20:46

எடப்பாடி நிலமை. ஸ்டாலின் கையில் கம்பு எடுத்து கொண்டால் ஆடு ரா ராஜா ஆடு


M Ramachandran
ஜூன் 23, 2024 20:00

எடப்பாட்டி துறுப்பு சீட்டு ஸ்டாலினிடம்....


M Ramachandran
ஜூன் 23, 2024 19:42

எடப்பாடி இது தான் சின்னா சந்து கிடைச்சிருக்கு குதி ஆட்டம் போடலாம். ஆனால் துருப்பு சீட்டு ஸ்டாலி நீடம் இருக்கு. எடுத்து போட்டால் கப் சிப் தான்


Govind Puramm
ஜூன் 23, 2024 13:49

சி பி ஐ விசாரணை நடத்தி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் அதில் திமுகவின் எம் எல் மக்கள் இருப்பின் அவர்களின் பதவியை பறிக்க வேண்டும்


T.sthivinayagam
ஜூன் 23, 2024 12:12

ஹிந்துக்களால் நிராகரிக்கட்ட பஜாகவும் மக்களாள் நிராகரிக்கபட்ட அதிமுகாவும் அமளி செய்வது வேடிக்கையாக உள்ளது


ராமகிருஷ்ணன்
ஜூன் 23, 2024 13:39

அதிமுக ஆட்சியில் திமுகவினர் கொடுத்த தொல்லைகள் மிகவும் அதிகம். சேர்த்து வைத்து திமுக ஆட்சியை விட்டு ஓடும் வரைக்கும் விடாதீர்கள்.


Kasimani Baskaran
ஜூன் 23, 2024 17:34

பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் நூற்றி நாற்பது இடங்களுக்கு குறைவாக பெற்று அனைவரும் சேர்ந்தும் கூட ஆட்சி அமைக்குமளவுக்கு வழியில்லாமல் இருக்கிறது. இதில் இந்துக்கள் பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்பது பரிசுத்தமான பொய்.


sridhar
ஜூன் 23, 2024 11:57

கள்ளச்சாராயத்தில் இனிமேல் மெத்தனால் கலக்கக்கூடாது - ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.


Kasimani Baskaran
ஜூன் 23, 2024 17:45

சர்க்கரை ஆலைகளில் கழிவாக வரும் மொலாசஸ் மூலம் எத்தனால் தயாரிப்பது எளிது. இதை நேரடியாக சந்தைப்படுத்த அவர்களுக்கு உரிமம் கிடையாது - அதாவது மது மூலம் கிடைக்கும் வரி கிடைக்காமல் அரசு நொடித்துப்போகும். அதனால் அதில் விஷம் கலந்து தொழில் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்கு விற்க அனுமதிக்கிறார்கள். அந்த விஷத்தை முறித்துத்தான் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள்.


Kasimani Baskaran
ஜூன் 23, 2024 09:11

அன்றிலிருந்து இன்றுவரை பட்டியலினத்துக்கு விரோதமாகவே நடந்து கொள்கிறார்கள். திருந்த பல வாய்ப்புக்கள் இருந்தும் வேங்கை வயலிலும், கள்ளக்குறிச்சியில் அதையே மறுபடியும் செய்திருக்கிறார்கள். பட்டியலினம்தானே எவன் கேட்பான் என்ற இறுமாப்பு. திருமாவும், அ ராசாவும் கேட்கமாட்டார்கள் என்பதால் தப்பி விடலாம் என்று நினைக்க முடியாது.


M Ramachandran
ஜூன் 23, 2024 19:57

கையேந்தும் திருட்டு மா அவர்கள் பக்கம். அப்புறமென்ன பட்டியலினாமா மற்றவர்ககளா. செய்யும் குற்றத்திற்கு பொது மக்கள் வரி பணம் விரையம்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி