உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓ.பி., அடிக்கும் டாக்டர், நர்ஸ்களை கண்காணிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமரா

ஓ.பி., அடிக்கும் டாக்டர், நர்ஸ்களை கண்காணிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள், நர்ஸ்கள் ஓ.பி., அடிப்பதை தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், மருத்துவமனை மற்றும் டாக்டர் அறை நுழைவு வாயில்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் டாக்டர்களுக்கு, காலை, 8:00 முதல் மாலை 4:00 மணி வரை பணி நேரம். அத்துடன், 'கால் டியூட்டி' என்ற அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும் பணிக்கு வருவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், டாக்டர்களுக்கான பணி நேரம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை இருந்தது. அதை விட, கூடுதலாக ஒரு மணி நேரம் பணி நேரமாக மாற்றி அமைக்கப்பட்டதற்கு, அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. அவ்வாறு வந்தாலும், விரைவாக சென்று விடுகின்றனர். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு, 4 முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே பணிபுரிகின்றனர். பெரும்பாலான நேரங்களில், நர்ஸ்கள் தான் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மாத்திரைகள் வழங்குகின்றனர். பிரசவத்தின் போது கூட சில இடங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை.பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே, அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தும், அவர்கள் முறையாக பணிக்கு வரவில்லை என்று, பொதுமக்கள் தரப்பில் இருந்து, பொது சுகாதாரத்துறைக்கு, அதிக அளவில் புகார்கள் வந்தபடி உள்ளன. சில இடங்களில், துறையின் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வுக்கு சென்ற போது, ஆரம்ப சுகாதார நிலையங்களில், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மட்டுமே, பணியில் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள், நர்ஸ்கள் ஓ.பி., அடிப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலபடுத்தவும், மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் அறை நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

விரைவில் செயல்படும்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 4,000க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி கேமரா'க்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் கேமரா பதிவுகளையும், சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து, நேரடியாக கண்காணிக்க முடியும். அத்துடன், அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலகங்களிலும், நேரடியாக கண்காணிக்கும் வகையில், அவை பொருத்தப்பட உள்ளன. இந்த கேமராக்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.- செல்வவிநாயகம்இயக்குனர், பொது சுகாதாரத்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

david david
நவ 20, 2024 18:23

முதலில் 3 ஷிப்ட்–க்கும் ஸ்டாப் நர்சு அப்பாய்ன்மெண்ட் பண்ணுங்க 8 டு 5, 5 டு அடுத்த நாள் காலை 9 வரை டியூட்டி– ஐ மாத்துங்க .அப்புறம் கேமிரா வைங்க ஆபிசர்.


aaruthirumalai
நவ 19, 2024 15:31

நடக்கறத சொல்லு கோபாலு


Barakat Ali
நவ 19, 2024 10:06

அரசு மருத்துவமனைகளில் இருக்கும் பல எக்க்யூப்மென்ட்ஸ் - எக்ஸ் ரே - அனலைசர்கள் - கூட பழுதாக்கப் படுகின்றன .... அங்கே டாக்டரைப்பார்த்தால் "இங்கே எதுவும் சரியில்ல ...... என் க்ளினிக்கு வாங்க" என்பார்கள் ......... ஜெகஜ்ஜால கில்லாடிகள் .......


Krishna Murthy
நவ 19, 2024 13:14

உன்னை யாராவது கூப்பிட்டாங்களா ராசா


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 19, 2024 09:52

இவை எல்லாமே கண்துடைப்புதான். அரசு நிர்வாகம் கண்டிப்புடன் செயல்படும், நாம் தப்பு செய்தால் தப்பிக்க முடியாது என்று தெரிந்தால் அரசு ஊழியர்கள் யாரும் தப்பு செய்ய மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதும் தப்பு செய்தால் தப்பிவிடலாம் என்ற எண்ணமும்தான். அரசு தலைமை மாறாதவரை இது எதுவும் மாறப்போவதில்லை.


முருகன்
நவ 19, 2024 09:01

வரவேற்க வேண்டிய ஒன்று கடமை தவறும் நபர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்


elangovan
நவ 19, 2024 08:16

நெசமாவா


பிரேம்ஜி
நவ 19, 2024 08:13

கேமரா நிறுவலாம். ஓகே. கண்காணிப்பாளர் சரியான நபரா? கேமரா எவ்வளவு நாள் இயங்கும்? முதலில் அவசியம் முக்கிய மருந்துகள் ஸ்டாக். ஒழுங்கான வைத்தியம்.


xyzabc
நவ 19, 2024 07:03

அவசியம் தேவையான கமெராக்கள்


புதிய வீடியோ