உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசின் புதிய சட்டங்களால் தனி மனிதனை குற்றவாளியாக்கலாம்: ரகுபதி

மத்திய அரசின் புதிய சட்டங்களால் தனி மனிதனை குற்றவாளியாக்கலாம்: ரகுபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய சட்டங்கள் வாயிலாக, ஆவணங்களை எளிதாக உருவாக்கி, தனி மனிதனை குற்றவாளியாக்க முடியும்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தென்னிந்திய வழக்கறிஞர்கள் மாநாடு, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. மாநாட்டில், தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம், 'வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்' என, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பின், அமைச்சர் ரகுபதி பேசியதாவது:புதிய குற்றவியல் சட்ட பெயர்கள், 'இண்டியா' கூட்டணியை நினைவுப்படுத்துகின்றன. அந்த கூட்டணி கட்சிப்பெயரின் முதல் வார்த்தையான, 'பாரதிய' என்ற வார்த்தையை, மக்கள் இடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், சட்டத்தின் பெயரை மாற்றியுள்ளனர். ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் நோக்கமும் தெரிகிறது.இச்சட்டங்களில் சேர்க்கப்பட்ட பிரிவுகள் வாயிலாக, சாமானியர்கள் பாதிக்கப்படுவதால் நாடே எதிர்க்கிறது. பிரிவுகள் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும், குழப்பமாகவும் உள்ளன. இச்சட்டங்களின் வாயிலாக, ஆவணங்களை எளிதாக உருவாக்கி, தனி மனிதனை குற்றவாளியாக்க முடியும். இவற்றில் உள்ள, சாதக, பாதகங்களை கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கையை பெற வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க., அழைப்புக்கு திருமா பதில்

மாநாட்டில், அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை பேசுகையில், ''என் அருகில் திருமாவளவன் அமர்ந்திருந்தார். தற்போது தமிழகமே, 'திருமா எங்கு செல்வார்' என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. இங்கு தான் இருக்கிறார். எங்களோடு தான் இருக்கிறார். ''நான் அரசியல் பேச வரவில்லை. வழக்கறிஞர்கள் இருக்கும் இடத்துக்கு வருவார் என்று சொன்னேன். அவர் நம்மோடு தான் இருப்பார், நல்லவர்களோடு தான் இருப்பார். திருமாவளவனுக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதால் வழிவிட வேண்டும் என்றனர். அவருக்கு வழிவிடவே காத்திருக்கிறோம்,'' என்றார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது:வழக்கறிஞர்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு வி.சி., துணை நிற்கும். கட்சிகளோடு அல்ல, மக்களோடு இருப்போம் என்பதே, இன்பதுரைக்கு என் பதில். மக்களுக்காக போராடுவோர் யாராக இருந்தாலும், அவர்களோடு நிற்க பக்குவப்பட வேண்டும். எந்த கட்சியில் இருந்தாலும், எதிர்கொள்ளும் போது கைகுலுக்கிக் கொள்வதில் தவறில்லை.இதையெல்லாம் தாண்டி, மனித உறவுகள் மேம்பட வேண்டும். தேர்தல் நிலைப்பாடு முற்றிலும் வேறானது. அது வெற்றி, நாடு, கட்சி நலன், காலச்சூழல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. முரண்பாடானவர்களுடன் இருக்க நேரிடலாம். இது, அரசியல் யுக்தி. அதை அனைத்து இடத்திலும் பொருத்தி பார்க்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சிக்கு பின், செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில்,''இன்பதுரை விடுத்தது, தேர்தலுக்கான அழைப்பு கிடையாது. புதிய குற்றவியல் சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கான அழைப்பு. நாங்கள் வேறு கூட்டணிக்கு செல்லவும், இன்னொரு கூட்டணி உருவாக்க வேண்டிய தேவையும் எழவில்லை,'' என்றார்.அ.தி.மு.க., இன்பதுரை கூறுகையில்,''நான் மேடையில் பேசியது, அரசியல் அச்சாரமாக இருக்கும். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. எனவே, நியாயத்தின் பக்கம் திருமா நிற்பார். கூட்டணி முடிவுகளை தலைமை இறுதி செய்யும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

K Raveendiran Nair
டிச 03, 2024 18:24

இந்தா வந்துட்டாருல... பல ஊரு பஞ்சாயத்துக்கு போவாரு போல இருக்கு


Parthasarathy Badrinarayanan
நவ 26, 2024 08:37

இப்ப மட்டும் எப்படி கஞ்சா வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தது எப்படி. அவமானம்


Narayanan
நவ 19, 2024 15:59

சட்ட திட்டங்கள் எதுவும் கடைபிடிக்காமல் ஆட்சியைப்பற்றி யார் பேசினாலும் சர்வாதிரகாரம் தலைவிரித்தாடி நள்ளிரவில் கூட நீதி பதியிடம் கட்டளை பெறமுடிகிறது . போங்கப்பா


Tetra
நவ 19, 2024 10:19

அப்படியா? திமுக கூடாரத்தில் ஒருவர் கூட இருக்க மாட்டார்களே. என்ன செய்வது


Selvaraj K
நவ 18, 2024 23:53

புதிய சட்டம் பெயர் மாறுதல் மற்றும் சில பிரிவு எடுத்தல் புகுத்தல் மற்ற படி பிரசிணை இல்லை ஆனால் வக்கீலுக்கு தனி பாதுகாப்பு சட்டம் தேவை இல்லை எனக்கு நீதி கிடைக்காததர்க்கு வக்கீல் சமுதாய சமூக விரோதிகலுக்கு பங்கு உண்டு


V Venkatachalam
நவ 18, 2024 18:50

அண்ணே நீங்க ஏன் பயப்படுறீங்க உங்களோட இருக்குற திருட்டு பயல்களையம் அப்படியே உங்களையும் பிடித்து உள்ளே தள்ள வசதியாகத்தானே இருக்கு.. அப்பறம் என்ன பயம்? .


Subash BV
நவ 18, 2024 18:42

Its just showoffs. Its already happening in the old laws. Present publication just copy paste document with BHARATH name.


Anand
நவ 18, 2024 12:07

திருட்டு கூட்டத்திற்கு ஒரே பயம்....


Madras Madra
நவ 18, 2024 10:14

இப்ப இருக்குற சட்டம்தான் இவருக்கு புடிக்கும் ஏன்னா எவ்ளோ ஊழல் குற்றம் பண்ணாலும் ஈஸியா தப்பிச்சிடலாம்


P.Sekaran
நவ 18, 2024 09:47

காவல்துறைதான் முதலமைச்சர் கையில்தான் உள்ளதே யார் வேண்டுமானாலும் உள்ளே போட உங்களால் முடியும் இதில் என்ன புதிய சட்டம் மீது குறை. அதைதான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் கஸ்தூரி, சவுக்கு சங்கர் இவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் எல்லாம் வேண்டுமென்றே புனையப்பட்ட குற்றச்சாட்டு. சீமான் சொல்வதில் ஞாயம் இருக்கிறது. கஸ்தூரியை கைது செய்வதில் அவர் என்ன கொலை குற்றமா செய்துவிட்டார். சும்மா கிடந்த சங்கை ஊதி பெரிதாக்குவதில் திருட்டு திராவிட கட்சி முதன்மையானது.


Selvaraj K
நவ 18, 2024 23:36

உண்மை


சமீபத்திய செய்தி