மேலும் செய்திகள்
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியது
5 hour(s) ago | 1
விருதுநகர் : ''இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜ., வுடன் கைகோர்க்கும் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இந்திய அரசியலின் பச்சோந்தி,'' என, விருதுநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா கூறினார்.அவர் கூறியதாவது: பல்கலை மானியக்குழு வெளியிட்ட வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறினால் நல்லதே. பீகாரில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் இணைந்து புதிய அரசை உருவாக்குவர்.மத்திய அரசின் பிரதிநிதியாக வந்து எதிர்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்களுக்கான பணிகளை தடுப்பதே கவர்னர்கள் ரவி, ஆரிப்முகமது கான், தமிழிசை, பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரின் பணியாக உள்ளது. கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.இந்தியா ஒரு ஜனநாயக நாடு. கட்சித்தலைவர்களின் வாரிசுகள் அடுத்ததாக கட்சியை நிர்வகிப்பதில் தவறில்லை. மத்திய அரசு சி.ஐ.ஏ., சட்டத்தை கொண்டு வந்த போது ராஜ்யசபாவில் ஆதரவு அளித்தவர் அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி. அவர் பா.ஜ.,வுடன் கூட்டணி முறிந்ததாக கூறுவது நாடகம் என்றார்.
5 hour(s) ago | 1