மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் விலை; சவரனுக்கு ரூ.560 உயர்வு
26 minutes ago
ஆராய்ச்சியாளர்களுக்கு மகளிர் ஆணையம் உதவித்தொகை
45 minutes ago
வாக்காளர் பெயர் சேர்ப்பு இன்று, நாளை சிறப்பு முகாம்
50 minutes ago
சென்னை : தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை முதல் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஒரு வாரமாக தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவுகிறது. நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். மாநிலம் முழுதும், பகல் நேர வெப்பநிலை சற்று அதிகரிக்கும்; அதிகாலையில் லேசான பனி மூட்டம் நிலவும்.குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசுவதால், அந்த பகுதிக்கு இரண்டு நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26 minutes ago
45 minutes ago
50 minutes ago