உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக ஆர்.எஸ்.எஸ்.,சில் முக்கிய நிர்வாகிகள் மாற்றம்

தமிழக ஆர்.எஸ்.எஸ்.,சில் முக்கிய நிர்வாகிகள் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அமைப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள, கேரளாவை இரண்டு மாநிலங்களாக, ஆர்.எஸ்.எஸ்., பிரித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ரீதியான மாநிலங்களின் எண்ணிக்கை, 46 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், தமிழக ஆர்.எஸ்.எஸ்., முக்கிய நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், நேற்று நிறைவு பெற்ற ஆர்.எஸ்.எஸ்., பொதுக்குழுவில் முக்கியமான பல்வேறு அறிவிப்புகள் வெளிடப்பட்டன. ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலராக தத்தாத்ரேய ஹொசபலே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருஷ்ணகோபால், முகுந்தா, அருண்குமார், ராம் தத் சக்கரதார், அதுல்லிமயே, அலோக்குமார் ஆகிய ஆறு பேர் இணைப் பொதுச்செயலர்களாக தேர்வாகினர்.ஆர்.எஸ்.எஸ்., தென்பாரத செயலராக இருந்த ராஜேந்திரன் மாற்றப்பட்டு கேரளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்பாரத அமைப்பாளராக இருந்த செந்தில்குமார் மாற்றப்பட்டு, கேரளத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். செந்தில்குமார் அகிலபாரத சேவா பிரிவு இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பாளராக பிரஷோப குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பில் இருந்த ரவிகுமார் தென்பாரத சேவா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

46 மாநிலங்கள்

அமைப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ரீதியாக மாநிலங்களை பிரித்து வருகிறது. வடதமிழகம், தென் தமிழகம் என ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆர்.எஸ்.எஸ்.,சில், 45 மாநிலங்கள் உள்ளன. இந்நிலையில், கேரள மாநிலம், வடகேரளம், தென் கேரளம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ