திருவெண்காட்டில் சதுர்வேத பாராயணம்
சென்னை:திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் அறக்கட்டளை வாயிலாக, 87ம் ஆண்டு கிருஷ்ண யஜுர்வேத கனபாராயணம் மற்றும் சதுர்வேத பாராயணம், மஹாருத்ர யாகம், பிப்., 9 முதல் 11ம் தேதி வரை திருவெண்காட்டில் நடைபெற உள்ளன.திருநாங்கூரில், 15ம் தேதி மாலை முரளீதர சுவாமிகள் தலைமையில் வேத பாராயணம் நடைபெற உள்ளது. வேத பரீட்சை, 17ம் தேதி மதியம், வடகுடி சங்கரராம தீட்சிதர் மற்றும் செகலபதி சுப்ரமண்ய கனபாடிகள் தலைமையில் ஸ் நடைபெறுகிறது. இறுதி நாளான பிப்., 19ல், நுாற்றுக்கணக்கான வேத வித்வான்கள், சிவாச்சாரியார்களை, அறக்கட்டளை டிரஸ்டிகள் மற்றும் வழக்கறிஞர் குப்பு சுவாமி மற்றும் சபா நிர்வாக அறங்காவலர் சந்திரன் கவுரவிக்கின்றனர். 'வரும் 2026ல், 88ம் ஆண்டு பாராயணம் அயோத்தியில் நடைபெறும்' என, சந்திரன் அறிவித்துள்ளார்.