உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வீடு சூறை; அறைகளில் மலம் வீச்சு

சவுக்கு சங்கர் வீடு சூறை; அறைகளில் மலம் வீச்சு

சென்னை; சென்னையில், சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய கும்பல், வீடு முழுதும் கழிவுநீரையும், மலத்தையும் கொட்டி அசிங்கப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதர மூர்த்தி தெருவில், 'சவுக்கு மீடியா' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் மற்றும் 68 வயதான அவரின் தாய் கமலாவும், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில், துாய்மை பணியாளர்கள் போன்று சீருடை அணிந்து வந்த கும்பல், அவரது வீட்டுக்குள் நுழைந்து, சங்கரின் தாய் கண்முன், வீட்டில் இருந்த பொருட்களை சூறைாடினர்.'டைனிங் டேபிள்', படுக்கை அறை என, எல்லா இடங்களிலும், மலத்தை வீசியுள்ளனர்.இதுகுறித்து, சங்கர் கூறியதாவது:நான் நேற்று காலை, 9:45 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி, காரில் வெளியே சென்றேன். வீட்டில் என் தாய் மட்டும் தனியாக இருந்தார். என் மீது ஏற்கனவே பதிவான வழக்கு தொடர்பாக, சென்னை மதுரவாயலில், என் தாயார் பெயரில் உள்ள வீடு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.அதனால், இந்த வீட்டிற்கு நான்கு மாதங்களுக்கு முன் தான் வாடகைக்கு வந்தோம். இந்த வீட்டு முகவரியை நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. நேற்று காலை, என் காரை கடந்து இரண்டு மினி பஸ்கள் சென்றன.அதில் இருந்தோர். என் மீது கற்களை வீசினர். இதனால், சந்தேகம் ஏற்பட்டு, என் தாயை தொடர்பு கொண்டு, 'வீட்டை பூட்டிக் கொள்ளுங்கள்; யார் தட்டினாலும் திறக்க வேண்டாம்' என கூறினேன். அப்போது என் தாய், பதற்றமாக, 'வீட்டின் கதவை பலமாக தட்டுகின்றனர்' என்றார். அதற்குள் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே சென்று சூறையாடினர்.என் தாயிடம் இருந்த மொபைல் போனை பறித்து, எனக்கு வீடியோ அழைப்பில் வந்து, சொல்லவே கூசும் அளவுக்கான வார்த்தைகளால் என்னை திட்டினர். துாய்மை பணியாளர்கள் போல உடை அணிந்து இருந்தனர்.'வீடு முழுதும் சூறையாடும் காட்சியை பாருடா' என, சொல்லி சிரித்தனர். பக்கெட்டில் எடுத்து வந்த சாக்கடையை கொட்டினர். சாப்பிடும் மேஜை, படுக்கை அறை என, எல்லா இடங்களிலும் மலத்தை கரைத்துச் கொட்டினர். உடனடியாக தொடர்பை துண்டித்து, அவசர போலீஸ் எண்:100க்கு தொடர்பு கொண்டேன். போலீசார் ஒரு மணி நேரம் கழித்து தான் வீட்டுக்கு சென்றனர். ஆனால், 'மர்ம நபர்கள் வெளியேறும் வரை, நீங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம்' என, என்னிடம் கூறி விட்டனர். இதனால், 11:45 மணியளவில் வீட்டிற்கு சென்றேன். வந்தவர்கள் என் தாய்க்கும், எனக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வீட்டிற்கு உள்ளேயே கால் எடுத்து வைக்க முடியவில்லை. அந்தளவுக்கு வீட்டை நாசப்படுத்தி உள்ளனர். வந்த ஆண்கள், பெண்கள் என, எல்லாரும் மது போதையில் இருந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

தவறில்லை

வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த, 15 பேர், 'உங்கள் மகன் துாய்மை பணியாளர்களான எங்களை அவதுாறாக பேசிவிட்டார்' எனக் கூறினர். அவர்களிடம், 'நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள். உங்கள் உரிமையும் உழைப்பும் சுரண்டப்பட்டு இருப்பதை, என் மகன் சுட்டிக்காட்டி உள்ளான். அவன் பேசியதில் தவறு இல்லை' எனக் கூறினேன். வந்தவர்கள் என்னை அடிக்கவில்லை. ஆனால், மொபைல் போனை பறித்துச் சென்றனர். அதை போலீசார் மீட்டுக் கொடுத்தனர். - ஆ.கமலா, சவுக்கு சங்கர் தாய்

'லைவ்' செய்த பெண்

சங்கர் வீடு முன், துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதையும், வீட்டில் சூறையாடப்பட்டதையும், வாணி ஸ்ரீ என்பவர், 'பேஸ்புக்'கில் நேரடி காட்சியாக ஒளிபரப்பினார். அவர், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை ஆதரவாளர் என, கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவத்தை, புளியந்தோப்பைச் சேர்ந்த ராகவன் முன்னின்று நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankar
மார் 25, 2025 12:45

பெருந்தகையானவரின் வேலை என்று ஊர் சொல்கிறது


Thani
மார் 25, 2025 12:14

kedu Kalam


vbs manian
மார் 25, 2025 11:10

கருது சுதந்திரம் காற்றோடு. காழ்புணர்ச்சியின் இமய வெளிப்பாடு.


Muralidharan S
மார் 25, 2025 10:36

தமிழகமே கடந்த நான்கு ஆண்டுகளாக நாறிக்கொண்டு இருப்பதை சிம்பாலிக்காக சொல்லிவிட்டு சென்று உள்ளார்கள் போல....


முதல் தமிழன்
மார் 25, 2025 09:57

சிறப்பான ஆட்சிக்கு இது ஒன்றே போதுமே?


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 25, 2025 09:26

சமீப காலமாக வேங்கைவயல் தொடங்கி அப்புறம் பள்ளிக்கூட கதவுலஎன்று ஆரம்பிச்சு இப்போ வேண்டாதவங்க வீட்டுக்குள்ளாற அசிங்கத்தை வீசுற அளவுக்கு தமிழ் கலாச்சாரத்தை வளர்த்த விதத்தை நெனைச்சா பெரும்ம்ம்ம்மய்யா இருக்கு அப்பா !


sankaranarayanan
மார் 25, 2025 08:18

இச்சம்பவம் குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இது போலீசார் கூறும் சகஜமான வார்த்தைகள்தானப்பா எந்த நடவடிக்கையிலும் எடுக்கப்பட மாட்டாது இது நிச்சயம் நிச்சயம் நிச்சயம் இதற்கு இந்த திட்டம் அமல்படுத்த பின்னால் திராவிட மாடல் அரசு உறுதுணையாக செயற்பட்டு வருகிறது


VENKATASUBRAMANIAN
மார் 25, 2025 07:21

இதுதான் சட்டம் ஒழுங்கு போலும். அராஜகம் செய்கிறார்கள். காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை