உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிரப்பள்ளி மலைப்பாதையில் யானைக்காக செக்போஸ்ட் திறப்பு

அதிரப்பள்ளி மலைப்பாதையில் யானைக்காக செக்போஸ்ட் திறப்பு

வால்பாறை: வால்பாறை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே, ஒற்றை யானை செல்வதற்கு வசதியாக, செக்போஸ்ட் திறக்கப்பட்டது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு, சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் ரோட்டில், கடைவீதியில் ஒற்றை யானை சென்றது. இதை கண்ட சுற்றுலா பயணியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, யானையை அங்கிருந்து விரட்டினர்.அதன் பின், ஒற்றை யானை ரோட்டில் ஹாயாக நடந்து சென்றது. மாலையில் அதிரப்பள்ளி செக்போஸ்ட் பகுதியை நெருங்கும் போது, வனத்துறையினர் யானை செல்ல வசதியாக செக்போஸ்ட்டை திறந்து விட்டு, மறைந்து கொண்டனர். இதனால் எந்தவித சேதமும் ஏற்படுத்தாமல் செக்போஸ்ட்டை கடந்து, வனப்பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.வனத்துறையினர் கூறியதாவது:வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் ஒற்றை யானை கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ளது. யாரையும் யானை தொந்தரவு செய்வதில்லை. யானை நடந்து செல்லும் வழித்தடத்தில் இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முன் கூட்டியே, செக்போஸ்ட் திறக்கப்பட்டது. வால்பாறை - சாலக்குடி ரோட்டில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி