உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபாஷ் சரவணன்; நேர்மையாளரை கவுரவித்த சென்னை போலீஸ்!

சபாஷ் சரவணன்; நேர்மையாளரை கவுரவித்த சென்னை போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆட்டோவில் பயணி தவறவிட்ட 40 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனை, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டி வெகுமதி வழங்கினார்.ஹைதராபாத், பராசக்தி நகரைச் சேர்ந்தவர் நித்திஷ் 39; தனியார் நிறுவன ஊழியர். இவர், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக, மனைவி மற்றும் தந்தையுடன், சென்னை, அரும்பாக்கத்திற்கு வந்தார். அங்கிருந்து, மூவரும், கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த சரவணன், 40, என்பவரின் ஆட்டோவில், அண்ணா நகர் 'ஏ - பி' பிளாக்கில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர்.அவர்கள் இறங்கிய பின், சரவணன் அங்கிருந்து சிறிது துாரம் சென்றபோது, பயணி அமரும் இருக்கையில் பை ஒன்று இருப்பதை கவனித்துள்ளார். அதை சோதித்தபோது, தங்க நகைகள் இருந்துள்ளன. உடனடியாக, அதே பகுதியில் உள்ள அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில், நகைகளை சரவணன் ஒப்படைத்தார்.போலீசார் விசாரித்து, விடுதியில் தங்கி இருந்த நித்திஷ் குடும்பத்தினரை அழைத்து, ஆய்வு செய்து 40 சவரன் நகைகள் மற்றும் டேப்பை, சரவணன் வாயிலாகவே உரியவர்களிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் சரவணனின் நேர்மையை, போலீசார், நித்திஷ் மற்றும் குடும்பத்தினர் பாராட்டினர்.இந்நிலையில், இன்று (பிப்.,17) ஆட்டோ டிரைவர் சரவணனை, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டி வெகுமதி வழங்கினார். இது குறித்து சென்னை போலீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' Honesty truly pays off. நேர்மை உண்மையிலேயே பலனளிக்கும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Venkatesan Ramasamay
பிப் 17, 2025 18:25

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா...நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.... உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடுஇரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.


chennai sivakumar
பிப் 17, 2025 18:15

சபாஷ் சரவணன் தம்பி அவர்களே. உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்களுடைய இந்த நற்செயல் நீங்கள் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்


Bahurudeen Ali Ahamed
பிப் 17, 2025 17:39

ஆகச்சிறந்த செயல் வாழ்த்துக்கள் சகோதரர் சரவணன் அவர்களே


என்றும் இந்தியன்
பிப் 17, 2025 16:19

மிக மிக அற்புதம் ஆட்டோ ஓட்டுபவரின் நேர்மையான செயல் மற்றும் போலீசின் செயல். திமுகவிற்குமட்டும் இது தெரிந்தால் ஆட்டோ ஓட்டுனரின் Driving License Cancel செய்யப்படும், போலீஸ் இடமாற்றம் செய்யப்படுவார். 40 சவரன் நகை = இன்றைய விலையில் ரூ ரூ 45 லட்சம் வரி எல்லாம் சேர்த்து


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
பிப் 17, 2025 15:46

நல்லது. அந்த சார் யாரு? கண்டுபிடிச்சாங்களா?


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
பிப் 17, 2025 15:42

எல்லாம் சரி. அந்த சார் யாரு?


Nandakumar Naidu.
பிப் 17, 2025 15:39

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் பல்லாண்டு.


Shankar
பிப் 17, 2025 15:29

இந்த சரவணன் நிச்சயமாக திமுககாரராக இருக்கமாட்டார்.


venkatan
பிப் 17, 2025 15:22

Even renowned call taxi drivers asks hefty ges from unaware passengers rather than billed amount.These are some rarest cases,should be honoured for gooddy awareness.


vijai hindu
பிப் 17, 2025 15:19

நல்ல மனிதர் வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி