உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்காசி பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

தென்காசி பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தென்காசி சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் 2 பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:தென்காசியில் இரு தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த துயர செய்தியை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்.மேலும் காயமடைந்துள்ளோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தர அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை