வாசகர்கள் கருத்துகள் ( 1 )
s://www.dinamalar.com/news/tamil-nadu-news/the-6-percent-increase-in-property-tax-in-municipalities-and-corporations-came-into-effect-without-any-announcement/3921163
சென்னை:இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு, 2025ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதுகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத்குமாருக்கு, முதல் பரிசாக 2.50 லட்சம் ரூபாய், 10,000 ரூபாய் மதிப்பிலான பதக்கம்; திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசுக்கு இரண்டாம் பரிசாக 1.50 லட்சம் ரூபாய், 7,000 ரூபாய் மதிப்பிலான பதக்கம்; நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாசுக்கு, மூன்றாம் பரிசாக, 1 லட்சம் ரூபாய், 5,000 ரூபாய் மதிப்பிலான பதக்கம் போன்றவற்றை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் வழங்கினார்.அத்துடன், அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வழியாக 76 இளநிலை உதவியாளர்கள், 68 தட்டச்சர்கள், ஏழு சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என, மொத்தம் 151 பேருக்கு நியமன ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் முருகானந்தம், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி பங்கேற்றனர்.
s://www.dinamalar.com/news/tamil-nadu-news/the-6-percent-increase-in-property-tax-in-municipalities-and-corporations-came-into-effect-without-any-announcement/3921163