உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு

அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதை அடுத்து, அடையாறு முகத்துவாரப் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவர் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பருவமழை பெய்து வருகிறது. இன்று காலை 8:30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு: * பள்ளிப்பட்டு 150 * நாலு முக்கு 118* ஊத்து 105* அரக்கோணம் 98* மேடவாக்கம் 93* பாலாமோர் 87 * கக்கச்சி 80* திருவாலங்காடு 75 * பேச்சிப்பாறை 72 * பெருஞ்சாணி 69 * திருத்தணி 65 * மின்னல் 61* திருச்சி 59 * திற்பரப்பு 58* திருவள்ளூர் 56 * மாஞ்சோலை 52* பனப்பாக்கம் 51 * பள்ளிக்கரணை 50* கொட்டாரம் 49* கண்ணகி நகர் 47இந்நிலையில், அடையாறு முகத்துவாரப் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார். முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்திடுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raj S
அக் 24, 2025 18:10

ஹா ஹா ஹா... காமெடி பீசு...


seshadri
அக் 24, 2025 14:56

எனக்கு ஒன்று மட்டும் புரிய இல்லை. இந்த அமைச்சர்கள் பெரும்பாலும் எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு தாண்டாதவர்கள் அப்படியே தண்டி இருந்தாலும் அவ்வளவு அறிவு இல்லாதவர்கள். நானும் பார்க்கிறேன் இந்த அமைச்சர் அங்கு ஆய்வு செய்தற் அந்த அமைச்சர் இங்கு ஆய்வு செய்தற் என்று செய்தி வருகிறது அப்படி என்ன அறிவு பூர்வமாக இவர்களால் யோசனை கொடுக்க முடியும் என்று புரியவில்லை.


N S
அக் 24, 2025 14:11

வீட்டிலிருந்து காலையில் நடை பயணம் செய்கையில், அப்பா அடையாறு முகத்துவரத்துக்கே வந்து விட்டார். காணும் இடமெல்லாம் மக்கள் "அப்பா, அப்பா" என்று அன்புடன் கூறினார்கள்.


N S
அக் 24, 2025 13:59

மணல் எவ்வளவு தேறும்? கட்டட வேலைக்கு எடுக்க காண்ட்ராக்ட் விடலாமே?


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
அக் 24, 2025 13:17

வலது கை என்ன ஆயிற்று?


Vasan
அக் 24, 2025 16:18

கொடுத்து கொடுத்து சிவந்த கை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை