உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆக்ஸ்போர்டு பல்கலையில் படிக்கும் தமிழக ஆதிதிராவிட மாணவர்கள் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

 ஆக்ஸ்போர்டு பல்கலையில் படிக்கும் தமிழக ஆதிதிராவிட மாணவர்கள் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ''தி.மு.க., அரசின் முன்னெடுப்பால், கடந்த ஐந்து ஆண்டுகளில், 385 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், 'ஆக்ஸ்போர்டு, எடின்பரோ' உள்ளிட்ட, முன்னணி பல்கலையில் படித்து வருகின்றனர்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, 9,371 பயனாளிகளுக்கு, 265.50 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று வழங்கினார். கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், அரசு சார்பில் முடிவுற்ற, 74.20 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளையும், முதல்வர் துவக்கி வைத்தார். பழங்குடியினர் வாழ்வாதார கொள்கையையும், அவர் வெளியிட்டார். முதல்வர் பேசியதாவது: அனைவரும் சமமாக வாழும் சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதுதான், நம் இலக்கு. ஆட்சிப் பொறுப்பு என்பது, நம் லட்சியங்களை, திட்டங்கள் வாயிலாக வென்றெடுப்பதற்கான வழி. அதனால்தான், தி.மு.க. , ஆட்சி அமையும் போதெல்லாம், சமூக நலத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, விளிம்பு நிலை மக்களை உயர்த்தி வருகிறோம். அந்த வகையில், தி.மு.க., அரசியல் வரலாற்றில் இல்லாத அளவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். நாம் பொறுப்பேற்றப் பின், கடந்த நான்கு ஆண்டுகளில் ஆதிதிராவிடர் துறைக்கு, 87,664 கோடி ரூபாய்; பழங்குடியினர் நலத்திட்டத்திற்கு, 8,078 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம். நம் ஆட்சியில் முத்தாய்ப்பான திட்டமாக, 'அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை' திட்டம் உள்ளது. கடந்து 2003 முதல் 2021 வரை, இத்திட்டத்தின் கீழ், ஆறு மாணவர்கள் மட்டும் பயனடைந்தனர். நம் அரசின் முன்னெடுப்பால், கடந்த ஐந்து ஆண்டுகளில், 385 மாணவர்கள், 'ஆக்ஸ்போர்டு, எடின்பரோ' உள்ளிட்ட முன்னணி பல்கலையில் படித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை