உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  12 தோழி விடுதிகள் கட்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

 12 தோழி விடுதிகள் கட்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

சென்னை:சமூக நலத்துறை சார்பில், 12 புதிய தோழி விடுதிகள் கட்ட, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அடிக்கல் நாட்டினார். திருப்பத்துார், கன்னி யாகுமரி உட்பட 12 மாவட்டங்களில், 62.51 கோடி ரூபாய் மதிப்பில், பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் 12 புதிய தோழி விடுதிகள் கட்டப்பட உள்ளன. கோவை மற்றும் திருச்சியில், 27.90 கோடி ரூபாயில் கூர்நோக்கு இல்லம் மற்றும் புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில், 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த இல்லத்தில், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும், 70- சிறுவர்கள் தங்கி பயன்பெறும் வகையில், தங்கும் அறைகள், வகுப்பறை, நுாலக அறை போன்றவை உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி