உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

சென்னை: நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் புகழ் ஓங்குக என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் விபிசிங்கின் புகழ் ஓங்குக. தமிழகமும், கருணாநிதியும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர். பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க் கொள்கையாக மதித்தவர். தமிழகத்திற்கும், அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023ம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங்கின் முழுவுருவச் சிலை.EWS, NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'மிஸ்' செய்கிறோம். சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
நவ 27, 2025 09:00

எங்கு சமூகநீதி வந்தாலும் திமுக தலிவர் பதவியில் சமூகநீதி கொடுக்காமல் தலிவர் பதவியை கருநாநிதி குடும்பம் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறது. தலிவர் பதவியை கருணாநிதி குடும்பத்தை தவிர்த்து அடுத்தவருக்கு கொடுத்தால் மட்டுமே நீங்க உண்மையான சமூகநீதி காவலர் இல்லையென்றால் போலி சமூகநீதி பேசுகிற நல்லவர் என சொல்வார்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை