உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் சம்பந்தி காலமானார்

முதல்வர் ஸ்டாலின் சம்பந்தி காலமானார்

சென்னை; முதல்வர் ஸ்டாலின் சம்பந்தியும், அவரது மருமகன் சபரீசன் தந்தையுமான வேதமூர்த்தி, 81, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு, இன்று நடக்கிறது.முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். அவரது தந்தை வேத மூர்த்தி, சென்னை நீலாங்கரையில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்; நேற்று அதிகாலையில் மரணம் அடைந்தார்.திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் உள்ள அரியநாயகிபுரத்தில் பிறந்தவர் வேதமூர்த்தி; வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது இறுதி சடங்குகள், இன்று மாலை 3:00 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை