உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி வரலாற்றை திணிப்பதில் முதல்வர் குறி: அண்ணாமலை குற்றச்சாட்டு

கருணாநிதி வரலாற்றை திணிப்பதில் முதல்வர் குறி: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' நம் குழந்தைகள் கல்வி குறித்தோ, கர்ப்பிணிகள் குறித்தோ எந்தக் கவலையுமில்லாமல், தனது தந்தையின் வரலாறை, பள்ளிப் பாடத்திட்டத்தில் திணிப்பதில்தான் குறியாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் '' என தமிழக பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், தேசிய ஊட்டச்சத்து திட்டமான போஷான் அபியான் திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், தமிழகப் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மதிய உணவுத் திட்டத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிறக்கும் காலத்தில், அவர்களின் ஆரோக்கியத்தை நோக்கமாகக் கொண்டு, நமது பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டம் போஷன் அபியான். நம் குழந்தைகள் பசியின்றிக் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் காமராஜரால் கொண்டு வரப்பட்டு, எம்ஜிஆரால் மேம்படுத்தப்பட்ட திட்டம் மதிய உணவுத் திட்டம். அதற்கான நிதியில் ஒரு பங்கு, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், நம் குழந்தைகள் கல்வி குறித்தோ, கர்ப்பிணிகள் குறித்தோ எந்தக் கவலையுமில்லாமல், தனது தந்தையின் வரலாறை, பள்ளிப் பாடத்திட்டத்தில் திணிப்பதில்தான் குறியாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். போஷான் அபியான் திட்டத்துக்கு, மத்திய அரசு கடந்த 2023 - 2024 ஆண்டு ரூ.398.52 கோடி. சென்ற 2024 - 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்கிய தொகை ரூ.324.2 கோடி. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? https://x.com/annamalai_k/status/1940755517611385032கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்துப் பெட்டகத்தில் ஊழல் செய்தது போதாதா? ஒட்டு மொத்த நிதியையுமே முடக்கும் திட்டமா? உடனடியாக, போஷான் அபியான் திட்ட ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் மதிய உணவுக்கான பொருள்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kasimani Baskaran
ஜூலை 04, 2025 04:09

பெரியாருக்கு கல்வி கொடுத்தது கூட ஆர்ட்டிஸ்ட் என்று கூட கூசாமல் பொய் சொல்வார்கள். உடன்பிறப்புக்களும் அவர்களின் டிஜிட்டல் அடிமைகளும் அதை சமூகவலைத்தளங்களில் கூட வெட்கமே இல்லாமல் ரிலே செய்வார்கள்.


மூர்க்கன்
ஜூலை 08, 2025 17:17

ஆமா ஆமா ?? குலத்தொழில் முறையில் ராஜாஜிக்கு கல்வி கொடுத்தவாளும் நம்மவதாம் ஒய் ??


சி.முருகன்.
ஜூலை 04, 2025 00:32

நீ ?


முருகன்
ஜூலை 03, 2025 21:51

பழைய சரித்திர வரலாற்றை அழிப்பதே சிலரின் வேலை


Vijay D Ratnam
ஜூலை 03, 2025 21:38

தம்பி அதை நீ சொல்லக்கூடாதுப்பா. மறந்துட்டியாப்பா,? நீ தானேப்பா சொன்ன : முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவது உலகெங்கும் வசிக்கும் தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை. அந்த நாணயத்தை வெளியிட இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கே நேரில் வந்திருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை என்று.


Kumar Kumzi
ஜூலை 04, 2025 00:39

வாழ்நாள் முழுதும் நீ இலவசங்கள நம்பி தான் வாழுவ ஓசிகோட்டர் கூமுட்ட


V Venkatachalam
ஜூலை 03, 2025 21:16

திருட்டு தீயமுக அனுதாபியா இருக்குற எவனாவது ஒருத்தனை பிடித்துக் கொண்டு வந்து அண்ணாமலை மேல் ஒரு கேஸ் போட்டு ஒரு கோடி ரூவா நஷ்ட ஈடு வசூல் பண்ணுவோம்.. அண்ணாமலையால் இது வரை அண்ணா அறிவாலயம் சுவரில் இருந்து ஒரு செங்கல்லை கூட உருவ முடியல.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 03, 2025 22:07

எப்படி முடியும்....அதிகாரத்தை கொடுத்து பாருங்கள்....வேட்டிய உருவி திஹாருக்கு அனுப்புவாரு....!!!


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 03, 2025 21:00

இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக படிக்காத ஐயா காமராஜரையும், படித்த ஐயா அப்துல் கலாமின் வரலாற்றுகளைபாட புத்தகத்தில் பாடமாக வைத்தவர்கள்..... எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாக உலக ஊழலின் தந்தை கருணாநிதியின் வரலாற்றை பாடமாக வைத்தால் இவருக்கு ஏன் வயித்தெரிச்சல்....!!!


செல்வா
ஜூலை 03, 2025 20:55

நான்கு கட்டிய ஆளு எழுதிய வாழமுடியாதவர்கள் கதை இப்ப சந்தி சிரிக்குது. பேசாம மருதம் எழுதியிருக்கலாம்


Venkateswaran V
ஜூலை 03, 2025 20:51

குடும்ப விளம்பரம்தான் முக்கியம் பெண்களாவது குழந்தைகள் நலனாவது அவை எங்கள்திட்டத்தில் இல்லை


hiren
ஜூலை 03, 2025 20:45

where is jaalra comedian Oviya vijay....


Venukopal,S
ஜூலை 03, 2025 20:59

ஆர்ட்டிஸ்ட்–க்கு ரூ.200 இன்னும் பட்டுவாடா ஆகவில்லை. எனவே கருத்துக்கள் வராது...


Ramesh Sargam
ஜூலை 03, 2025 20:38

கருணாநிதி வரலாற்றை படிக்கும் மாணவர்கள் அனைவரும் நாளை அவர்போல ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கமாட்டார்கள். அது உறுதி.


A viswanathan
ஜூலை 03, 2025 23:58

நானும் ஆமோதிக்கிறேன் .


முக்கிய வீடியோ