உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேரிடரை கையாள இன்னும் கற்க வேண்டும்: அலுவலர்களுக்கு தலைமை செயலர் அறிவுரை

பேரிடரை கையாள இன்னும் கற்க வேண்டும்: அலுவலர்களுக்கு தலைமை செயலர் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பேரிடர் சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, நாம் அனைவரும் கூடுதலாக கற்றுக்கொள்ள வேண்டும்,'' என, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கடந்த டிசம்பரில் நடந்த, 'இரட்டை பேரிடர்களின் படிப்பினை கள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள்' குறித்த ஒரு நாள் கருத்து பரிமாற்ற பயிலரங்கம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

புதிய வழிகள்

பயிலரங்கத்தை துவக்கி வைத்து, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:கடந்த ஆண்டு டிசம்பரில் தாக்கிய, 'மிக்ஜாம்' புயல் பாதிப்புக்கு பின், அரசு அலுவலர்கள் கலந்துரையாடல் நடத்த திட்டமிட்டு இருந்தோம். குறிப்பாக, தென்மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகம் இருந்தது. இதுபோன்ற பேரிடர் சூழலை, நாம் எவ்வாறு கையாள்வது என்பதை, நாம் அனைவரும் கூடுதலாக கற்றுக்கொள்ள வேண்டும்.புயல், வெள்ள காலங்களில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது; எப்படி எதிர்கொள்வது என்பதே இந்த கருத்தரங்கின் நோக்கம். பேரிடர் காலங்களில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை, புதிய வழிகளில் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்தும் ஆராய வேண்டும்.மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணிகளை கவனிக்க வேண்டும். சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில், நிறைய கற்றுள்ளோம்; பல பணிகளை செய்து உள்ளோம். தற்காலிக மற்றும் நிரந்தரப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துரையாடல்

பயிலரங்களில் பல்வேறு துறை அலுவலர்கள், ஏழு குழுக்களாக பிரிந்து விவாதித்து, அறிக்கை அளித்தனர். பேரிடர் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல்; உடனடி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்; உடனடி நிவாரணம் வழங்குதல்; உள்கட்டமைப்புகளின் மீட்பு, புனரமைப்பு; வெள்ளத் தடுப்புக்கான நகர்ப்புற திட்டமிடல்; சமூக ஈடுபாடுகள்; மக்கள் தொடர்புத் துறை பணி ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.ஏழு குழுக்கள் பரிந்துரை அடிப்படையில், எதிர்காலத்தில் பேரிடர்களை சந்திப்பதில், உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

g.s,rajan
பிப் 04, 2024 20:14

அவங்க கத்துக்கிறதுக்கு மீண்டும் ஒரு வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் வரவேண்டுமா ...???கடவுளே பட்டது போதும் மக்களை விட்டு விடு ...


PRAKASH.P
பிப் 04, 2024 12:01

Sir whatever training if officers and public staffs got.. finally if political looters are not spending money for cleaning drainage, lake , rivers, then no use


rajan_subramanian manian
பிப் 04, 2024 11:20

திறமையாக அரசும் அதிகாரிகளும் பேரிடரை சமாளித்ததாக முதல்வரும் மந்திரிகளும் அப்போது சொன்னது பொய்யா கோப்பால்?


rasaa
பிப் 04, 2024 10:23

இவர் பேச்சின்போது தூங்கிக்கொண்டும், கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவர்களே அதிகம் இருப்பார்கள்.


அப்புசாமி
பிப் 04, 2024 09:54

பெரும்பான்மையான ஐ.ஏ.எஸ் கேடர்கள் வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள். ட்ரிம்மா டிரஸ் பண்ணிட்டு ஆபீசுக்கு வருவார்கள். களத்தில் இறங்கி பணி செய்ய மாட்டார்கள்.


அப்புசாமி
பிப் 04, 2024 09:52

2015ல வெள்ளம் போது இவர் தமிழகத்தில் வேலையில் இல்லியா? ஒண்ணுமே கத்துக்கலையா?


vadivelu
பிப் 04, 2024 11:19

ஐந்து நாட்களாக பெரு மழை பெய்யும், பாடாய்படுத்தும் என்று வானிலை மையம் சொல்லியே தூங்கி இருந்தோம்.மத்தியில் நமக்கு வேண்டாத கட்சி ஆட்சியில் இருக்கும் போது எதற்காக நாம முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கணும், தவறு நடந்தால் அவர்கள் மீதும், வானிலை மையம் மீதும் பழியை போடலாம், மக்களின் பாதிப்புக்கு நஷ்ட ஈட்டை கேட்டு நாம் பெறலாம்.எவ்வளவு அனுகூலம் இருக்கு. சினிமா கலைஞர்கள் , மீடியாக்கள் வேறு குரல் கொடுப்பார்கள்.போதுமே.


karunamoorthi Karuna
பிப் 04, 2024 09:31

ஒவ்வொரு துறைக்கும் ஒரு நிரந்தர கையேடு உள்ளது அந்த கையேட்டில் ஆண்டு தோறும் கழிவுநீர் வடிகால்களை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் இதை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் இந்த தூர் வாரும் பணி செய்யப் பட்டது என்று சொல்லி கொள்ளை அடித்து போலி தகவல் கொடுப்பதை நிறுத்த வேண்டும்


கண்ணன்
பிப் 04, 2024 09:23

எல்லாம் சரி; அரசு என்பது எப்போதும் மெத்தனம்தான்; வெட்டியாக எங்கள் வரிப்பணம் எல்லாம் உங்களுக்கு சம்பளமாகப் போய்க்கொண்டிருக்கிறது. சற்றாவது மனச்சாட்சி வேண்டாமா? ரூ. 4000 கோடி என்னவாயிற்று?


ராஜா
பிப் 04, 2024 08:17

முதலில் எரி, குளம், ஆறு போன்றவற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும். ஆற்றில் வரம்பு மீறி மணல் அள்ளுவது தடுக்கப்பட வேண்டும். பேரிடர் வெள்ளம் போன்றவற்றில் பாதிப்படையாத வண்ணம் கட்டிடங்கள், சாலைகள், மின் வழித்தடங்கள் தரமாக, தகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட வேண்டும். இவையெல்லாம் தான் வெள்ளம் வந்தவுடன் முதலில் பாதிப்படைந்தது. இவைகள் பாதிக்கப்பட்டால், எவ்வளவு திறமையான அதிகாரிகள் இருந்தாலும் மக்களை மீட்க அந்த இடத்திற்கு போகக்கூட முடியாது. மழை வந்தவுடன் முதல் வேலையாக மின்சாரத்தை துண்டித்ததால் தொலை தொடர்பு சாதனங்கள் செயலற்று உதவி கேட்க கூட முடியாத அவல நிலை மக்களுக்கு ஏற்பட்டது. இவைகள் எதையும் சரி செய்ய முடியாமல் வெறுமனே அதிகாரிகளை பயிற்றுவித்து மட்டும் என்ன பலன்? இரு திராவிட கழகங்களின் ஊழல் ஆட்சியில் அவர்கள் செய்த வேலைகள் ஊர் சிரிக்க வைத்து விட்டது.


Sampath
பிப் 04, 2024 08:05

How to swindle more during disasters


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ