உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கையில் தமிழர்களுக்கு 500 வீடுகள் வழங்கி சீனா தாராளம்

இலங்கையில் தமிழர்களுக்கு 500 வீடுகள் வழங்கி சீனா தாராளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: இலங்கையில் கடலோரப் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு சீனா 500 வீடுகள் வழங்கி தாராள மனதை காட்டி இந்தியாவுக்கு 'செக்' வைக்க திட்டமிட்டுள்ளது.இலங்கையின் வடகிழக்கு கடலோர பகுதியில் சீன ஆதரவுடன் கடல் அட்டை பண்ணை அமைக்கப்பட்டது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனை சமாளிக்கவும், ஏற்கனவே தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை இந்தியா வழங்கியதை மறைக்கும் விதமாகவும் தற்போது 500 ரெடிமேட் வீடுகளை சீனா வழங்கியுள்ளது.உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்ட இந்த வீடுகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 116, கிளிநொச்சி, முல்லை தீவு, மட்டக்களப்பு, திரிகோணமலை, மன்னார், கல்முனை ஆகிய 6 மாவட்டங்களில் தலா 64 வீதம் 500 வீடுகளை நேற்று கொண்டுவந்து இறக்கியுள்ளது. இந்தியாவுக்கு மட்டுமின்றி இலங்கைக்கும் எதிர்காலத்தில் இது சிக்கலை ஏற்படுத்தும் என இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S. Gopalakrishnan
ஜூலை 10, 2024 19:41

மோதி ஜி செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள் வழங்கினார்.


Bala
ஜூலை 10, 2024 21:15

ஈழத்தமிழருக்குக் கட்டிக் கொடுத்த வீடுகள் குடியிருக்கும் நிலையில் இல்லாத படி பாழடைந்து விட்டது. பாலங்கள் வானுருதிமையத்தின் நிலையை விடக் கேவலம். சென்று பார்த்துவிட்டு பதிவிடவும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை