உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துமஸ் பண்டிகை: தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவு நிறைவு

கிறிஸ்துமஸ் பண்டிகை: தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவு நிறைவு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை ஒட்டி, தென் மாவட்ட விரைவு ரயில்களில், டிச., 23, 24ம் தேதி பயணத்துக்கான முன்பதிவு முடிந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை, வரும் டிச., 25ம் தேதி வருகிறது. அதே காலத்தில், பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளும் முடிந்து விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 60 நாட்களுக்கு முன் ரயில்களில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், டிச., 23, 24ம் தேதிகளில் பயணிக்க விரும்புவோர், கடந்த இரண்டு நாட்களாக முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில், கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, துாத்துக்குடி, செங்கோட்டை, பாண்டியன், மலைக்கேட்டை உள்ளிட்ட விரைவு ரயில்களில், 'ஸ்லீப்பர்' பெட்டிகளுக்கான முன்பதிவு முடிந்தது. அடுத்த, 30 நிமிடங்களில், 'ஏசி' வகுப்புகளுக்கான முன்பதிவும் முடிந்தது. இருப்பினும், வந்தே பாரத், தேஜஸ், வைகை, குருவாயூர் விரைவு ரயில்களில் மட்டும் கணிசமாக டிக்கெட்டுகள் இருந்தன. இதேபோல், கோவை தடத்தில் செல்லும் வந்தே பாரத், இன்டர்சிட்டி, கோவை சூப்பர் பாஸ்ட் ஆகிய விரைவு ரயில்களில், அனைத்து வகுப்பு பெட்டிகளிலும், கணிசமான அளவுக்கு டிக்கெட்டுகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை