உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பு கோலிவுட் நோக்கி விரியும் விசாரணை

ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பு கோலிவுட் நோக்கி விரியும் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், கோடிக்கணக்கான ரூபாய் சினிமா பிரபலங்களுக்கு கைமாறி இருப்பதால், விசாரணை அவர்களை நோக்கி விரிவடைந்துள்ளது.

கணக்கு ஆய்வு

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

ஜாபர் சாதிக், தி.மு.க.,வில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் கொடி கட்டி பறந்துள்ளார்.அவருக்கு பக்கபலமாக, சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் இருந்துஉள்ளனர்.ஜாபர் சாதிக்கின் மொபைல் போன் தொடர்புகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட சில சினிமா பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பது தெரிய வந்துள்ளது. 'மங்கை' மற்றும் அமீர் இயக்கி வரும், 'இறைவன் மிகப்பெரியவன்' போன்ற படங்கள் தயாரிப்பு தொடர்பான பணப் பரிவர்த்தனையை தாண்டி, சந்தேகப்படும் முதலீடுகள் ஏராளமாக உள்ளன. ஜாபர் சாதிக் கோலிவுட் பிரபலங்களுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்திருக்கலாம். அவர்கள் வாயிலாக இரவு பார்ட்டி, பண்ணை வீடுகளில் கும்மாளம், 'பப்'களுக்கு செல்லும் இளசுகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.

சந்தேகம்

எங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள சில பிரபலங்கள், நள்ளிரவுகளில் தான் தொடர்பில் இருந்துள்ளனர். இதுவும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மூன்று ஆண்டுகளாக ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள் ஒருவரையும் விடாமல், அனைவர் குறித்தும் தகவல் சேகரித்துள்ளோம். அவரின் ஐந்து வங்கிக் கணக்குகள் முழுவதையும் ஆய்வு செய்து முடித்துள்ளோம்.புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஜாபர் சாதிக் ஏற்பாடு செய்த பார்ட்டிகளில் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகள் குறித்த விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் டில்லியில் மூன்று பேரை கைது செய்த பின், காவல் துறையைச் சேர்ந்த சிலர் ஜாபர் சாதிக்கிற்கு தகவலை கசியவிட்டுள்ளனர். அவர், பிப்., 15 அன்றே குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார். வெளிநாட்டிற்கு தப்பி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை