உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எளிய பின்புலங்களில் இருந்து சாதிப்பவர்களின் வெற்றியில் பெருமை கொள்ளும் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

எளிய பின்புலங்களில் இருந்து சாதிப்பவர்களின் வெற்றியில் பெருமை கொள்ளும் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை; பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, 'உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?' என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார். கார்த்திகாவும், அபினேஷூம் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.நேற்று நான் பைசன் படத்தில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்கத்தின் பெருமை கொள்கிறது, இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Vasan
அக் 26, 2025 20:30

கடந்த 5 ஆண்டுகளாக விளையாட்டில் முன்னேறிய தமிழகம், 2026 முதல் விளையாட்டு துறையில் மீண்டும் பின் தங்கி விடுமே என்று நினைக்கையில் என் நெஞ்சம் பதைபதைக்கிறது.


நிக்கோல்தாம்சன்
அக் 26, 2025 21:26

இன்னமும் எத்துணை எத்துணை ஏமாற்றங்களை பார்க்கவேண்டுமோ ? ஏய்யா அந்த ஊனமுற்ற நபர் கோப்பையை வென்றார் அது போன்றா சாதிப்பவர்கள் இருப்பார்கள் ? இல்லை சென்னை பிசி சாலையில் கார் ரேஸ் நடத்திய போன்றா


theruvasagan
அக் 26, 2025 19:56

எளிமையான பின்புலத்தி்ல் இருந்து வந்த எத்தனை தொண்டர்கள் கட்சியில் முக்கியமான பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். எத்தனை பேருக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டது. அண்டைவீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று சுயமுயற்சியால் முன்னுக்கு வந்தவர்களுக்கு சமூகநீதி.ஸ்டிக்கர் ஒட்டுவது வெத்து விளம்பரமே.


nagendhiran
அக் 26, 2025 19:14

அன்று திருட்டு தனமா ரயிலில்? இன்று அயராது உழைப்பால் பாதி தமிழகம் ஆட்டையை? மாதிரியா முதல்வரே?


Karthikeyan Palanisamy
அக் 26, 2025 19:01

ஆனால் எளியவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது அப்படித்தான


Venugopal, S
அக் 26, 2025 18:26

இதுக்கும் ஸ்டிக்கர் அரசியலா? சுய முயற்சியால் யார் சாதனை படைத்தாலும் ஸ்டிக்கர் ஒட்டி மகிழ்ச்சியை தம்பட்டம் அடித்துக் கொள்ளும்...


Suresh Velan
அக் 26, 2025 18:14

ஏண்டா டேய் , எளிய பின்புலம் என்று சொல்லிட்டு , மெடிக்கல் சீட்டிற்கு மட்டும் உஊழல் பெருச்சாளி ஜகத்ராட்சகன் மூலமா , 1 கோடி கேட்கிறீர்களே , அப்ப , எளிய பின்புலத்தில் வருபவர்கள் என்னடா செய்வது ,அதை சால்வ் பண்ண வந்திருக்கும் நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்லி , திரவடியா பயல்கள் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறாங்க , அதை என்னடா செய்வது ,


Anantharaman Srinivasan
அக் 26, 2025 18:13

எளியவரிவர் சொந்தமுயற்சியில் வெற்றி பெற்று வந்தால் உடனே ஸ்டிக்கர் ஒட்டி பெருமை தேடிக்கொள்ளல். இதைத்தான் ஊரில் கல்யாணம் மாரினில் சந்தணம்.என்பர்.


ஆரூர் ரங்
அக் 26, 2025 17:49

நூற்றுக்கணக்கான கண்ணகி நகர் சுற்றுவட்டார ஆட்கள் போலீஸ் பட்டியலில் உள்ளனர். அது திராவிட மாடல் வளர்ச்சியா?.


SUBBU,MADURAI
அக் 26, 2025 17:39

அனிதாவின் மரணத்தை விளம்பரப் படுத்தி ஆட்சிக்கு வந்த இந்த திராவிட மாடல் அரசு இது போன்ற மலிவான விளம்பர உத்திகளை வைத்து தமிழக மாணவ மாணவிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது


sundarsvpr
அக் 26, 2025 17:29

எளிய பின்புலங்கள் என்றால் எல்லா வகுப்பிலும் எளியவர்கள் இருப்பார்கள். உயர் வகுப்புகளிலும் சக்தி அற்றவர்கள் இருப்பர். அவர்களில் சிலர் ஊக்குவிக்கப்பட்டால் திராவிட முன்னேற்ற கழக தலைவரான ஸ்டாலின் போற்றப்படுவர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இது வர புண்ணியங்கள் செய்து இருக்கவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை