உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 ஆண்டுகள் கழித்து சந்தித்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சி; நெகிழ்ச்சியோடு முதல்வர் வெளியிட்ட பதிவு

3 ஆண்டுகள் கழித்து சந்தித்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சி; நெகிழ்ச்சியோடு முதல்வர் வெளியிட்ட பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனது உதவியால் கல்லூரி மேல்படிப்பை முடித்த மாணவியை நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின், பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.ஏழ்மையின் காரணமாக தனது கல்லூரி படிப்பிற்கு உதவிடுமாறு கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவி ஷோபனா கடிதம் எழுதியிருந்தார். அதனை ஏற்ற முதல்வர், மாணவியை நேரில் அழைத்து கல்லூரியில் சேர உதவியதுடன், அவரது மேல்படிப்புக்கும் உதவுவதாக உறுதியளித்தார். அதன்படி, மீனாட்சி அரசு கலை கல்லூரியில் பி.பி.ஏ., படிப்பை முடித்த மாணவி ஷோபனா, தனது குடும்பத்தோடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளர் பணிக்கான ஆணையை கொடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன். மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன். ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்!,' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bhaskaran
நவ 12, 2024 10:07

கல்வி உதவி பாராட்டத்தக்கது ஆனால் பணிநியமனம் போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே கொடுக்கவேண்டும்.இவரைவிடதகுதி உள்ள இன்னொருவரின் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது


N Sasikumar Yadhav
நவ 11, 2024 09:42

உண்மையிலேயே திமுக அறக்கட்டளை மூலம் உதவியிருந்தால் பாராட்டலாம் உதவி செய்திருக்குமா திமுக அறக்கட்டளைகள்


Venkatesan.v
நவ 10, 2024 22:30

Refer those girls, I will help them


Mohanakrishnan
நவ 10, 2024 21:55

தி மாடலில் சாதாரணமப்பா


Kasimani Baskaran
நவ 10, 2024 20:41

எத்தனை ஆயிரம் சாராயக்கடைகளை அரசே திறந்து பல லட்சம் குடும்பங்களை நடுத்தெருவில் விட்டு விட்டு இது போல ஒருவருக்கு உதவி செய்து என்ன ஆகப்போகிறது?


Sathyanarayanan Sathyasekaren
நவ 10, 2024 20:28

இதே போல அனிதாவுக்கு இவரின் கொத்தடிமைகள் நடத்தும் ஒரு கல்லூரியில் படிக்கவைத்து இருக்கலாமே? இவர்களின் சுயநல அரசியலுக்காக ஒரு பெண்ணை கொலை செய்தது புரியாமல் கொத்தடிமைகள் இவரின் பொய்களை நம்புகிறார்கள்.


Ramesh Sargam
நவ 10, 2024 19:47

அந்த மாணவியைப்போல பல லட்சம் மாணவியர்கள், மாணவர்கள் உள்ளனர். எல்லோருக்கும் இப்படி உதவி செய்திடவேண்டும்.


Anantharaman Srinivasan
நவ 10, 2024 19:25

ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதமானால் போதாது. தேவைப்படும் எல்லா பெண்களுக்கும் இதுபோல் வாழ்வு கிடைக்க வேண்டும். திமுக மந்திரிகள் மாஜிக்கள் எல்லோரும் இதுபோல் செய்ய முன்வர வேண்டும்.


ஆரூர் ரங்
நவ 10, 2024 18:34

ட்ராமா போட்டோ ஷூட்டில் தமிழ்நாடு டாப்.


sundarsvpr
நவ 10, 2024 17:04

முதல்வர் உதவி செயதார் என்றால் அரசு உதவியில் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஸ்டாலின் உதவி செய்தார் என்றால் அவரின் வருமானம் அல்லது சொத்து என்று கருதவேண்டும். நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள். அரசு வேலை வணங்கினார் என்பது அடுத்த மகிழ்ச்சியான செய்தி. நேரடி நியமனம் என்றால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியவேண்டாமா? தேர்வு எழுதவேண்டாமா? இப்படி வாய்ப்பு இருக்கிறது என்றால் எல்லா அமைச்சர்களும் தங்கள் துறையில் எளியவர்களுக்கு வழங்க இயலும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை