உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை ரூ.34.50 காசுகள் குறைந்து, ரூ.1789க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன.இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலையை மாற்றுகின்றன.இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை ரூ.34.50 காசுகள் குறைந்து உள்ளது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் ரூ.1,823க்கு விற்பனை செய்யப்பட்டது.தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம், அந்த சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், அதே விலையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sundarsvpr
ஆக 01, 2025 15:20

அரசியல் எதிர கட்சிகள் இது தவறான அணுகுமுறை என்று ஏன் போராடவில்லை? தேர்தல் நிதி மக்கள் கொடுக்கமாட்டார்கள் ஆனால் வணிகர்கள் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் கொடுப்பார்கள் எல்லா அரசியல் கட்சிகளும் தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்பது உண்மை.


Ramesh Sargam
ஆக 01, 2025 12:20

ஹோட்டல்களில் இந்த வணிக சிலிண்டர்கள்தான் உபயோகபடுத்துவார்கள். அவர்கள் சிலிண்டர் விலை ஏறினால், உடனே அங்குள்ள தினபண்டங்கள் விலையை உடனே ஏற்றிவிடுவார்கள். ஆனால் சிலிண்டர் விலை குறைந்தால், பண்டங்களின் விலையை குறைக்கவே மாட்டார்கள்.


ديفيد رافائيل
ஆக 01, 2025 11:51

கடைகளில் உணவுப் பொருள் விலை மட்டும் குறைக்க மாட்டேங்குறானுங்க


பாமரன்
ஆக 01, 2025 08:18

அதென்ன திமிங்கிலம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை